தமிழ் திரையுலகிற்கு பல தரமான படைப்புகளை தந்த, மறைந்த இயக்குனர் சிகரம் கே. பாலசந்தரின் மனைவி ராஜம், சென்னையில் இன்று அதிகாலை அவர் 4.30 மணியளவில் காலமானார். அவரது குடும்பம் அல்லாது திரைபிரபலங்களையும் சோகத்தில் ஆழ்த்தியது இச்சோக செய்தி.   

கடந்த சில நாட்களாக உடல் நல குறைவுடன் இருந்துள்ளார். இன்று மாலை 3மணிக்கு மேல் சென்னை மைலாப்பூரில் அவரது இறுதி சடங்குகள் நடைபெறுகிறது.