தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் பாலா இயக்கத்தில் சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக நடித்து வெளிவரவிருக்கும் படம் 'வர்மா'. இப்படம் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான விஜய் தேவரகொண்டா நடித்த அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியிருக்கிறது. 

Ace Director Bala Is Not Carrying The Varma Movie Project Featuring Dhruv Vikram

இந்த படத்தில் துருவ்வுக்கு ஜோடியாக நடிகை மேகா நடித்துள்ளார். மேலும் படத்தில் நடிகைகள் ரைசா, ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ரதன் இசையமைத்துள்ளார். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். வர்மா படத்தின் திரையரங்கு விநியோக உரிமையை சக்திவேலன் வாங்கியுள்ளார் என்ற செய்தியெல்லாம் நாம் அறிந்தவையே.

Ace Director Bala Is Not Carrying The Varma Movie Project Featuring Dhruv Vikram

தற்போது வெளியாகியிருக்கும் செய்தி என்னவென்றால் இயக்குனர் பாலா இந்த படத்தை விட்டு சென்றதாகவும். வேறொரு இயக்குனர் இந்த படத்தை மீண்டும் ஷூட் செய்ய உள்ளதாகவும் நெருங்கிய சினிமா வட்டாரங்கள் மூலம் தெரியவந்தது. இதனால் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர் துருவ் ரசிகர்கள். மூன்று மாதத்தில் படத்தின் ஷூட்டிங் முடித்து திரையிட திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் கசிந்து வருகிறது.

Ace Director Bala Is Not Carrying The Varma Movie Project Featuring Dhruv Vikram