இயக்குனர் பாலாஜி மோஹன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் மற்றும் சாய் பல்லவி நடித்த மாரி 2 திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் சக்கை போடு போட்டு வருகிறது. 

இந்நிலையில் இப்படத்தின் ரவுடி பேபி பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. நடனப்புயல் பிரபுதேவாவின் ஸ்டைலில் உருவான இப்பாடலில் தனுஷ் மற்றும் சாய்பல்லவியின் ஆட்டம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

தற்போது இதுகுறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ட்விட்டரில், அவரது மகளான தீ சிறந்த பாடகர் மற்றும் டான்சர் தனுஷுடன் சேர்ந்து பாடியது குறித்து இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவிற்கு நன்றியை பதிவிட்டிருக்கிருக்கிறார்.