தமிழ் திரையுலகில் தனது சீரான நகைச்சுவை நடிப்பால் அனைவரின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் பரோட்டா சூரி.

தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் 10 year Challenge-ல் தனது புகைப்படத்தை வெளியிட்டு அசத்தியிருக்கிறார்.

அதில் வெண்ணிலா கபடிகுழு தருணத்தில், 2009-ம் ஆண்டில் எடுத்த புகைப்படத்தையும் தற்போது எடுத்த புகைப்படத்தையும் பதிவு செய்திருக்கிறார். இதைக்கண்ட சூரி ரசிகர்கள் ஹாலிவுட் நாயகர்களுக்கு இணையாக உடல் அமைப்பு கொண்டிருக்கிறார் என்று காமெடியாக பதிவு செய்து வருகின்றனர்.