ஹாரர் காமெடி திரைப்படமான தில்லுக்குதுட்டு திரைப்படம் திரை விரும்பிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இயக்குநர் ஜான்சன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் A1- அக்யூஸ்ட் நம்பர் 1. இதில் சந்தானத்திற்கு ஜோடியாக தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களில் நடித்த தாரா அலிஷா நடிக்கிறார். 

Ace Comedian Hero Santhanam A1 Movie First Song Update In Johnson Direction

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்திற்கு கோபி ஜெகதீசன் ஒளிப்பதிவு செய்கிறார். சர்க்கிள் பாக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் எஸ்.ராஜ் நாராயணன் இந்த படத்தை தயாரிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் வெளியாகி அசத்தியது.

Ace Comedian Hero Santhanam A1 Movie First Song Update In Johnson Direction

தற்போது வெளியாகிய செய்தி என்னவென்றால், A1 படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகுமாம். நிச்சயம் இந்த படமும் ரசிகர்களை பெரிதளவில் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ace Comedian Hero Santhanam A1 Movie First Song Update In Johnson Direction

மேலும், சந்தானத்தின் நடிப்பில் சர்வர் சுந்தரம், ஓடி ஓடி உழைக்கணும், உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக இருப்பது குறிப்பிடத்தக்கது.