மைண்ட் ஸ்க்ரீன் சினிமாஸ் தயாரிப்பில் ராஜிவ் மேனன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம் சர்வம் தாளமயம். விர்ஜின் பசங்களின் நாயகன் என இளைஞர்கள் மத்தியில் போற்றப்படும் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், பீட்டர் என்ற கதாப்பாத்திரத்தில் நடிகை அபர்ணா பாலமுரளியுடன் நடித்துள்ளார்.

சிறந்த ஒளிப்பதிவாளராகவும் இயக்குனராகவும் திரையுலகில் தன்னை நிலைநிறுத்தி கொண்ட ராஜிவ்மேனன், தனது ட்விட்டர் பதிவில், தல அஜித்துடன் சேர்ந்து பணியாற்றிய 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தின் புகைப்படங்களை வெளியிட்டார்.

இதனால் உற்சாகமடைந்த தல ரசிகர்கள் மீண்டும் இக்கூட்டணியில் படம் அமையுமா ? என்ற கேள்விகளை முன்வைத்தனர். தல-ஆக உயர்ந்திருக்கும் அஜித்தின் திரை வளர்ச்சியில் இப்படம் பெரிய மைல்-கல் என்றே கூறலாம். தற்போது H. வினோத்தின் தல 59 படங்களில் பிஸியாக இருக்கிறார் அஜித் என்பது நாம் அறிந்தவையே. அதுமட்டுமல்லாமல் பொங்கலுக்கு வரும் விஸ்வாசம் படத்திற்கு மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர் தல ரசிகர்கள்.