உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து 22 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகிறது. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும் இப்படத்திலும் கமல்ஹாசன் முதியவராகவும், இளமை தோற்றத்திலும் இரு வேடங்களில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு காஜல் அகர்வால் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். 

ஹாலிவுட் மேக்கப் கலைஞர்கள் சென்னைக்கு வந்து கமல்ஹாசனை வயதான தோற்றத்துக்கு மாற்றி மேக்கப் டெஸ்ட் மற்றும் படம் எடுத்தனர். அந்த தோற்றம் இப்போதும் அவருக்கு கச்சிதமாக பொருந்தி இருப்பதாக ஷங்கர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் முதல் லுக் வெளியானது, சேனாபதியை மீண்டும் கண்ட ரசிகர்கள் தெம்புடன் வரவேற்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு பொலிவியா மற்றும் பஹாமாஸ் போன்ற இடங்களில் மார்ச் மாதத்தில் நடக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியது. சமீபத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பு மேக்கப் காரணமாக நிறுத்தப்பட்டது என்ற செய்தி வெளியாகியது. இந்த செய்திக்கு கமல் ஹாசன் தரப்பிலிருந்து முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது எனவும் கூறப்படுகிறது.

Ace Bollywood Actor Boman Irani Joins The Crew Of Indian Sequel In Shankar Direction

தற்போது படத்திற்கு வலு சேர்க்கும் வகையில், போமன் இரானி படத்தில் இணைந்துள்ளார் என்ற செய்தி அமைந்துள்ளது. பாலிவுட் நட்சித்திரமான இவரின் நடிப்பு படத்தில் எம்மாதிரி இருக்கும் என்ற ஆர்வத்தில் உள்ளனர் கமல் ரசிகர்கள்.

Ace Bollywood Actor Boman Irani Joins The Crew Of Indian Sequel In Shankar Direction