சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 167-வது படத்தை AR முருகதாஸ் இயக்க உள்ளார். ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். நயன்தாரா, யோகிபாபு போன்ற நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கவுள்ளனர். பேட்ட படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்த நிஹாரிகா பசின் கான் இந்த படத்தில் காஸ்ட்டியூம் டிசைனராக பணியாற்ற உள்ளார். சமீபத்தில் படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகியது. மிகவும் ஸ்டைலிஷாக உள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள்.

Ace Actor Sriman Joins The Sets Of Superstar Darbar

தர்பார் படத்தின் முதற் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது என்ற செய்தி சமீபத்தில் தெரியவந்தது. படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நேற்று மே 29-ம் தேதி முதல் துவங்கப்பட உள்ளதாம்.

Ace Actor Sriman Joins The Sets Of Superstar Darbar

தற்போது படத்தில் ஸ்ரீமன் நடிக்கிறார் என்ற செய்தியை ரசிகர்களுடன் பகிர்ந்தார். 19 வருடங்களுக்கு முன் இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தீனா படத்தில் ஸ்ரீமன் நடித்திருந்தார் என்பது கூடுதல் தகவல்.

Ace Actor Sriman Joins The Sets Of Superstar Darbar