சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கடந்த வருடம் வெளியான கனா படம் மாபெரும் வெற்றியை பெற்றது.பெண்கள் கிரிக்கெட்டை மையமாக கொண்ட இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார்.அருண்ராஜா காமராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

Aaradhana Sivakarthikeyan Vaayadi Petha Pulla Lyric Video From Kanaa Crosses Hundred Million Views

திபு நினன் தாமஸ் இசையில் இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.குறிப்பாக சிவகார்த்திகேயன் தனது மகளுடன் இணைந்து பாடிய வாயாடி பெத்த புள்ள பாடல் வைரல் ஹிட் ஆனது.

Aaradhana Sivakarthikeyan Vaayadi Petha Pulla Lyric Video From Kanaa Crosses Hundred Million Views

ஆராதனா சிவகார்த்திகேயனின் மழலை குரலில் ,அவர் செய்யும் சேட்டைகளையும் படம் பிடித்து வெளியிட்ட அந்த பாடலின் மேக்கிங் வீடியோ தற்போது 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.இதன் மூலம் இந்த சாதனையை செய்யும் மூன்றாவது தமிழ் வீடியோ என்ற பெருமையை பெறுகிறது.முன்னதாக தனுஷின் கொலவெறி,ரௌடி பேபி இரண்டு பாடல்கள் இந்த இலக்கை தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Aaradhana Sivakarthikeyan Vaayadi Petha Pulla Lyric Video From Kanaa Crosses Hundred Million Views

இந்த வீடியோ இன்னும் பல சாதனைகளை புரிய வேண்டும் என்று கலாட்டா நிறுவனம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.