இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற இசை ஜாம்பவானாக திகழும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக ரசிகர்களை தன் இசையின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். அந்த வகையில் இயக்குனர் பார்த்திபனின் உலக சாதனை முயற்சியாக NON LINEAR SINGLE SHOT திரைப்படமாக தயாராகியிருக்கும் இரவின் நிழல் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

முன்னதாக இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் கோப்ரா, இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏலியன்-சயின்ஸ் ஃபிக்சன் படமாக தயாராகியிருக்கும் அயலான் மற்றும் மலையாளத்தில் ஃபகத் பாசில் நடித்திருக்கும் மலையன்குஞ்சு உள்ளிட்ட படங்களுக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

மேலும் இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். பொன்னியின் செல்வன் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் தற்போது இறுதிக்கட்ட இசை பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதனிடையே ஏ.ஆர்.ரஹ்மானின் மூத்த மகள் கதீஜா ரஹ்மானின் திருமணம் தற்போது நடைபெற்றுள்ளது. பிரபல சவுண்ட் இன்ஜினியர் ரியாசுதீன் ரியானை, கதீஜா ரஹ்மான் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் மணமக்களை ஆசிர்வதித்து வாழ்த்துகள் கூறி திருமண புகைப்படத்தை ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பதிவிட்டுள்ளார். வைரலாகும் அந்த புகைப்படம் இதோ…
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ARR (@arrahman)