ஜார்கண்ட் மாநிலம் கிரிதி மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் புதிதாகப் பிறந்த குழந்தையை எலி கடித்ததில், அந்த குழுந்தை தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஜார்கண்ட் மாநிலம் கிரிதி மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் புதிதாகப் பிறந்த குழந்தையை எலி கடித்ததில், அந்த குழுந்தை தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அன்று பணியில் இருந்த இரண்டு செவிலியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.  

ஜார்கண்ட் மாநிலம், கிரிதி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், பிறந்து மூன்று நாட்களே ஆன குழந்தையை  எலி கடித்துள்ளது. இதில் குழந்தையின் முழங்கால் பகுதியில் கடுமையாக கடித்ததில், குழந்தை தற்போது ஆபத்தனா நிலையில் உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவர்களின் கவனக்குறைவினால் ஏற்பட்டுள்ளது என்று குற்றச்சாட்டப்படுகிறது. கடந்த மே 2-ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தையை மேல் சிகிச்சைக்காக ஷாஹித் நிர்மல் மஹ்தோ மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுமதித்துள்ளனர். மேலும் தற்போது குழந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து அன்று பணியில் இருந்த இரண்டு செவிலியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து இதன் குறித்து குழந்தையின் தாய் பேசும் போது, “ கிரிதி அரசு மருத்துவமனையின் தாய் மற்றும் குழந்தை நல வார்டில் பிறந்த குழந்தையைப் பார்க்கச் சென்றபோது, குழந்தையின் முழங்காலில் எலிகள் கடித்ததால் ஏற்பட்ட ஆழமான காயங்களைக் கண்டதாகக்  கூறினார்.  கடந்த ஏபரல் 29 ஆம் தேதி குழந்தை பிறந்ததாகவும் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் தனி குழந்தைகள் நல வார்டில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் இதனிடையே குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோக்கி தாக்கியுள்ளதாகவும் சிறந்த மருத்துவமனையில் அனுமதிக்குமாறும் பணியில் இருந்த செவிலியர் கூறியதாக குழந்தையின் தாய் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அன்று மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து இதுகுறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மருத்துவமனையின் செவிலியர்கள் மீது குற்றல் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் மிக திவீரமானதும் என்றும் மருத்துவர்களின் கவனக்குறைவே காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.