தனது விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் பிரபல தெலுங்கு இயக்குனர் K.V.அனுதீப் இயக்கத்தில் உருவாகும் #SK20 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

முன்னதாக இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் R.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள சயின்ஸ் ஃபிக்சன் நகைச்சுவை திரைப்படமான அயலான்படத்திலற்கு இசைப்புயல் A.R.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். அயலான் திரைப்படத்தின் இறுதிக்கட்ட மற்றும் VFX பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 

அடுத்ததாக உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் #SK21 படத்திலும் நடிக்கவுள்ள சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளிவரவுள்ள திரைப்படம் டான். லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் இணைந்து டான் படத்தை தயாரித்துள்ளனர்.

இயக்குனர் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து S.J.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கதாநாயகியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி, சூரி, முனிஸ்காந்த், பாலசரவணன், RJ விஜய், காளி வெங்கட், ராஜு ஜெயமோகன், சிவாங்கி ஆகியோர் இணைந்து நடித்துள்ள டான் படத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார் 

ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் ட்ரெண்டிக்க, டான் படம் வருகிற மே 13'ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. முன்னதாக டான் திரைப்படத்தின் ட்ரைலர் நாளை (மே 6-ஆம் தேதி) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது படத்திலிருந்து புதிய போஸ்டரை வெளியீட்டு ட்ரைலர் மாலை 7 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். வைரலாகும் அந்த போஸ்டர் இதோ…