தனக்கே உரித்தான ஸ்டைலில் அஜித் குமார் & தளபதி விஜய் ஆகியோரை வைத்து வாலி & குஷி என விளையாட்டுத்துறை படங்களை கொடுத்த இயக்குனர் S.J.சூர்யா நடிகராகவும் பல விதமான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.

முன்னதாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து S.J.சூர்யா நடித்துள்ள டான் திரைப்படம் வருகிற மே 13-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் அடுத்ததாக இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் பொம்மை மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் இணைந்து உயர்ந்த மனிதன் என S.J.சூர்யா நடித்துள்ள திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன. 

மேலும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷாலுடன் இணைந்து S.J.சூர்யா நடிக்கும் மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பு இன்று (மே 5)  பூஜையுடன் தொடங்கியது.  தொடர்ந்து வெப் சீரிஸிலும் களமிறங்கியுள்ள S.J.சூர்யா காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள கிரைம் திரில்லர் சீரிஸான வதந்தி வெப் சீரிஸ் விரைவில் அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீஸாகவுள்ளது

இந்த வரிசையில் முன்னதாக இயக்குனர் வெங்கட் ராகவன் இயக்கத்தில் SJ.சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் கடமையை செய். பிக்பாஸ் போட்டியாளரும் நடிகையுமான யாஷிகா ஆனந்த் கதாநாயகியாக நடித்துள்ள கடமையை செய் படத்திற்கு வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்ய, அருண்ராஜ் இசையமைத்துள்ளார்.

கணேஷ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நஹர் பிலிம்ஸ் இணைந்து வழங்க, சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிடும் கடமையை செய் திரைப்படம் வருகிற மே மாதம் உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடமையை செய் படத்தின் ட்ரைலர் நாளை (மே-6) வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.