இயக்குனர் பிரேம்குமாருக்கு தொடரும் 96 Effect !
By Sakthi Priyan | Galatta | March 09, 2019 13:20 PM IST
இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடித்து வெளிவந்த படம் தான் 96. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று 100-வது நாளை எட்டியுள்ளது. பள்ளி பருவ காதல், நட்பை வைத்து அழகாக மக்கள் மனதை வருடியது 96.
இப்படத்தில் நடித்த அனைத்து கதா பாத்திரங்களும் ரசிகர்களை ஈர்த்தது. இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. ராம் என்ற கதாபாத்திரத்தில் தோன்றும் விஜய் சேதுபதி, ஜானு என்ற கதாபாத்திரத்தில் தோன்றும் த்ரிஷா அந்த கேரக்டராகவே வாழ்ந்து நமது பள்ளி பருவத்தை நினைவு படுத்துகிறார்கள்.
மேலும் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா மேனனின் பின்னணி இசை நம் செவிகளைத்தாண்டி ஆழ் மனதை தொடும் வகையில் அமைந்தது. சமீபத்தில் விஜய்சேதுபதி இவருக்கு புதிய பைக் ஒன்றை பரிசளித்தார்.
தற்போது இந்த வண்டிக்கு 96 என்ற நம்பரை ரிஜிஸ்டர் செய்திருக்கிறார். முதல் சர்விசும் 96 KM வந்தவுடன் விடுவார் என்று சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள்.