96 இயக்குனருக்கு கிடைத்த பரிசு ! 96 km கடந்ததும் first Service-ஆ ?
By Sakthi Priyan | Galatta | January 18, 2019 13:54 PM IST
இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடித்து வெளிவந்த படம் தான் 96. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று 100-வது நாளை எட்டியுள்ளது.
பள்ளி பருவ காதல், நட்பை வைத்து அழகாக மக்கள் மனதை வருடியது 96. இப்படத்தில் நடித்த அனைத்து கதா பாத்திரங்களும் ரசிகர்களை ஈர்த்தது. இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. ராம் என்ற கதாபாத்திரத்தில் தோன்றும் விஜய் சேதுபதி, ஜானு என்ற கதாபாத்திரத்தில் தோன்றும் த்ரிஷா அந்த கேரக்டராகவே வாழ்ந்து நமது பள்ளி பருவத்தை நினைவு படுத்துகிறார்கள்.
மேலும் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா மேனனின் பின்னணி இசை நம் செவிகளைத்தாண்டி ஆழ் மனதை தொடும் வகையில் அமைந்தது. மக்கள் செல்வனின் வெற்றி பட வரிசையில் இதுவும் ஒன்று.
சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, இயக்குனர் பிரேம்குமாருக்கு சிவப்பு வெள்ளை நிற ராயல் என்ஃபீல்ட் பைக்கை பரிசாக வழங்கியுள்ளார்.
ஒளிப்பதிவாளராய் திரையுலகில் தடம் பதித்து தன்னுடைய முதல் படத்திலேயே ரசிகர்களுக்கு சிறந்த படைப்பை வெளிப்படுத்திய இயக்குனர் பிரேம் குமார் மென்மேலும் வெற்றி பெற கலாட்டா சார்பாக வாழ்த்துகிறோம்.