லைக்கா ப்ரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம் 2.0. இப்படத்தின் ட்ரைலர் வரும் நவம்பர் 3-ஆம் தேதி வெளிவரும் என படக்குழுவினர் அறிவித்தனர். நவம்பர் 29-ஆம் தேதி 2டி மற்றும் 3டியில் வெளிவரவிருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது. 

2Point0 Movie Distribution Rights To Be Banged By NVR Cinemas In Andhra And Telugana

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் ஏமி ஜாக்சன் மற்றும் அக்ஷய் குமார் போன்ற நடிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்துள்ளனர்.

2Point0 Movie Distribution Rights To Be Banged By NVR Cinemas In Andhra And Telugana

தற்போது வெளியாகியிருக்கும் செய்தி என்னவென்றால் 2.0 படத்தின் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில விநியோக உரிமைகளை என்.வி.ஆர் சினிமாஸ் பெற்றுள்ளது என லைக்கா தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.

மேலும் ரசிகர்களின் படைப்புகளை வைத்து 2.0 ப்ரோமோஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் தினமும் ரசிகர்களால் உருவாக்கப்பட்ட போஸ்டர்களை தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.