ஐ.நா சபை அலுவலக பணிக்காகக் கொடுத்த காரில், அதிகாரி ஒருவர் பெண்ணுடன் உல்லாசத்தில் ஈடுபட்ட வீடியோ ஒன்று வெளியாக அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இஸ்ரேல் நாட்டில், ஐக்கிய நாடுகளின் சபைக்கு பணியாற்றும் அதிகாரி ஒருவருக்கு அலுவலக அலுவலக பணிகளுக்காக அரசு சார்பில் வாகனம் ஒன்று கொடுக்கப்பட்டு இருந்தது. அந்த வாகனம், அந்நாட்டின் முக்கிய சாலையில் மாலை நேரத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்தது.

அந்த வாகனத்தில் ஒரு அதிகாரி பின் இருக்கையில் அமர்ந்திருந்தார். அவரது மடியில் இளம் பெண் ஒருவர், சிகப்பு நிற ஆடை அணிந்தபடி, அந்த அதிகாரியின் மடியில் அமர்ந்து, அந்த அதிகாரியுடன் உல்லாசத்தில் ஈடுபடுகிறார்.

அப்போது, அந்த கார் அங்குள்ள சிக்னல் ஒன்றில் நிற்கிறது. அந்த காரின் இருபுறமும் மற்ற வாகனங்கள் வந்து நிற்கின்றன. ஆனால், இதைப் பற்றிய கவலைப்படாத அந்த அரசு அதிகாரி, அந்த இளம் பெண்ணுடன் உல்லாச இன்பத்தில் ஈடுபடுகிறார். பின்னர், சிக்னல் போட்டதும், அந்த கார் புறப்பட்டுச் செல்கிறது. அப்போதும் கூட, அந்த ஜோடி உல்லாச இன்பத்தில் ஈடுபட்ட படியே அந்த காரில் பயணிக்கின்றனர்.

இந்த காட்சிகள், அங்கிருந்த சிசிடிவி கேமராவால் பதிவாகி தற்போது வெளியாகி, பெரும் வைரலாகி வருகிறது. 
 
அத்துடன், இந்த செயலுக்கு அந்நாட்டில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்த ஐ.நா. சபை விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளது. இது குறித்து பேசிய ஐ.நா. சபையின் செய்தி தொடர்பாளர், டுஜாரிக், “இது போன்ற செல்கலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. நாம் எதற்காக பணியாற்றுகிறோமோ, எதற்காகக் குரல் கொடுக்கிறோமோ.. அதற்கு எதிரான குற்றம் இது” என்றும் கூறினார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வெளியாகி உள்ள நிலையில், பல்வேறு தரப்பினரும், தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், “இது தனிப்பட்ட விசயம் என்றால், அதை அவர்கள் வீட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், பொது இடத்தில், அதுவும் ஐ.நா. சபை பணிக்காக கொடுக்கப்பட்ட வாகனத்தில் இப்படியொரு செயல்பாட்டை அனுமதிக்க முடியாது” என்றும் பல்வேறு தரப்பினரும் வன்மையாகக் கண்டன குரல்களைப் பதிவு செய்து வருகின்றனர். 

இதனிடையே, ஐ.நா சபை அலுவலக பணிக்காகக் கொடுத்த காரில், அதிகாரி ஒருவர் பெண்ணுடன் உல்லாசத்தில் ஈடுபட்ட வீடியோ ஒன்று வெளியாக தற்போது வைரலாகி வருகிறது பெரும் சர்சையை ஏற்படுத்தி உள்ளது. 

அதேபோல், மதுரையில் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் ஒருவர், போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். 

மதுரை சிலைமான் பகுதியை சேர்ந்த 22 வயதான சதீஷ், அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த விசயம் சிறுமியின் வீட்டிற்குத் தெரிய வந்துள்ளது.

இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், சதீஷ் வீட்டிற்குச் சென்று அவரை கடுமையாக எச்சிரித்துள்ளார். அத்துடன், தன் மகள் பின்னாடி சுற்றாக் கூடாது என்றும், அவர் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத சதீஷ், அந்த சிறுமி பின்னாடியே திரிந்ததாகக் கூறப்படுகிறது. 

மேலும், கடந்த 23 ஆம் தேதி இரவு வீட்டிலிருந்து கடைக்குச் சென்ற சிறுமி, திடீரென்று காணாமல் போய் உள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார், அந்த பகுதி முழுவதும் மகளைத் தேடி அலைந்துள்ளார். எங்குத் தேடியும் சிறுமி கிடைக்காத விரக்தியில், அங்குள்ள காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த விசாரணை மேற்கொண்ட போலீசார், மாயமான சிறுமியை சதீஷ் கடத்தியது தெரிய வந்தது. இதனையடுத்து, 2 நாட்கள் கழித்து, அதிரடியாகச் சிறுமியை மீட்ட போலீசார், சதீஷை கைது செய்தனர். 

மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில்; சதீஷ், சிறுமியைக் கடத்தி 2 நாட்களாகத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த போலீசார், சதீஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதே போல், விளாத்தி குளம் அருகே பள்ளி மாணவியைக் காதலித்து கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவரை போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் உள்ள ஆற்றங்கரை பகுதியில் வசிக்கும் 20 வயதான அன்பு தாசன், அங்குள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார்.

இதனிடையே, அதே பகுதியைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு படிக்கம் மாணவியைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

இருவரும் காதலித்து வந்த நிலையில், சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி, சிறுமியிடம் தனிமையில் நெருக்கமாக இருந்துள்ளார். இதன் காரணமாக, அந்த சிறுமி கரு உற்றாள்.

இந்த தகவல் சிறுமியின் வீட்டிற்குத் தெரிய வந்த நிலையில், அதிர்ச்சியடைந்த அவர்கள் அன்பு தாசன் மீது அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் அன்பு தாசனைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.