வீட்டில் கணவன் இல்லாத நேரம் பார்த்து, தான் பெற்ற குழந்தையை அந்த தாயே மிக கொடூரமாகத் தாக்கி அதனை வீடியோவாக அவரே பதிவு செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகில் உள்ள சத்தியமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மணலப்பாடி மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்த வடிவழகன் என்பவருக்கு, ஆந்திர மாநிலம் சித்தூர் தாலுகா கராம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான துளசி என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது.

இதனையடுத்து, அந்த தம்பதிகள் வடிவழகன் சொந்த ஊரான மணலப்பாடி மேட்டூர் கிராமத்தில் வசித்து வந்தனர். திருமணத்திற்குப் பிறகு, மிகவும் மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த இவர்களுக்கு 4 வயதில் கோகுல் என்ற மகனும், 2 வயதில் பிரதீப் என்ற மகன் என மொத்தம் 2 மகன்கள் இருக்கின்றனர்.

இப்படியான சூழலில் தான் கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை வந்திருக்கிறது. இந்த சண்டை அவர்களுக்குள் அடிக்கடி தொடரவும் செய்திருக்கிறது.

இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவரது மனைவி துளசி, கடந்த பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி வீட்டில் இருந்த கணவன் வெளியே சென்றிருந்த நேரம் பார்த்து, தனது இளைய மகன் 2 வயதான பிரதீப்பை, பெற்ற தாய் பாசத்தையும் மறந்து, மிக கொடூரமாகத் தாக்கி உள்ளார். 

அத்துடன், கொடூரத்தின் உச்சமாக, தனது மகனை மிக கடுமையாகத் தாக்கியதை அவரே அதனை வீடியோவாகவும் தனது செல்போனில் பதிவு செய்து உள்ளார். 
பெற்ற தாய் கடுமையாகத் தாக்கியதில் பலத்த காயமடைந்த குழந்தை பிரதீப், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் தற்போது தனது தந்தையுடன் வசித்து வருகிறார்.

அதே நேரத்தில், தான் பெற்ற குழந்தையைத் தாய் பாசம் மறந்து கடுமையாக தாய்யிக தாய் துளசி, தனது தாய் வீடான ஆந்திரா மாநிலத்திற்குச் சென்று விட்டார். 

இந்த நிலையில் தான், தனது குழந்தையைத் தாய்மையை மறந்து மிருகத்தனமாக பெற்ற தாயே தாக்கும் இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் தற்போது பரவி அதிகம் வைரலாக பரவி வருகிறது. 

இந்த வீடியோவை பார்த்த பல்வேறு தரப்பினரும் கடும் அதிர்ச்சியடைந்து, குழந்தையைத் தாக்கிய அந்த துளிச்சிக்கு எதிராக மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வலியுறுத்தி வருகின்றனர். இதனால், தனது குழந்தையைத் தாக்கிய துளசிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.