தென்னிந்தியாவின் சிறந்த பல்கலைக்கழகங்களின் மூன்றாவது இடத்தில் சத்யபாமா பல்கலைக்கழகம்.. - விவரம் உள்ளே..

தென்னிந்தியாவின் சிறந்த பல்கலைக்கழகங்களின் மூன்றாவது இடத்தில் சத்யபாமா பல்கலைக்கழகம்.. - விவரம் உள்ளே.. - Daily news

தரமான திறன் மேம்பாட்டையும் வளமான கல்வியையும் மாணவர்களுக்கு முறைப்படி வழங்கி வரும் மிகப்பெரிய கல்வி நிறுவனமாக சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் இருந்து வருகிறது. நாளுக்கு நாள் மாணவர்களின் எதிர்காலத்தை முதல் நோக்கமாக கொண்டு பல முயற்சிகளை அயராமல் சத்யாபாமா பல்கலை செய்து வருகிறது. அந்த பணி மக்களிடம் நம்பிக்கையாக மாறி இன்று தவிர்க்க முடியாத எதிர்காலமாக சத்யாபாமா உயர்ந்துள்ளது. இதனை அதிகாரபூர்வமாக நிருபிக்கும் வகையில் அவ்வப்போது பல அங்கீகாரங்கள் விருதுகள் என்று சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்திற்கு கிடைத்து வருகிறது. அதன்படி முன்னதாக நாக் கவுன்சில் ‘ஏ பிளஸ் பிளஸ்’ என்ற உச்சபட்ச அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது வீக் மற்றும் ஹன்ஸா 2023 ன் கணக்கெடுப்பின் படி நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்களின் வரிசையில் இந்திய நாட்டின் சிறந்த பல்துறை பல்கலைகழகத்தின் பட்டியலில் சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைகழகம் 374 மதிப்புகளை பெற்று 7 வது இடத்தில் வகிக்கின்றது. மேலும் தெற்கில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் 3 வது இடத்தையும் ஒட்டு மொத்த நாட்டில் 30 வது இடத்தையும் சத்யா பாமா பல்கலைக்கழகம் பிடித்துள்ளது.

இந்த முடிவு சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்திற்கு மேலும் ஒரு அன்கீகாரத்தை கொடுப்பது இல்லாமல் மக்களிடம் அசைக்கமுடியாத நம்பிக்கையையும் மாணவர்களின் எதிர்காலத்திற்கு உறுதியையும் கொடுத்துள்ளது. கல்வியை சரியான இடத்தில் பெற வேண்டும் என்பதே நாட்டில் உள்ள பலரின் விருப்பமாக இருந்து வருகிறது.

பெற்றோர்கள் மாணவர்கள் என்று பலரது கனவும் சரியான கல்வி வழங்குமிடத்தில் நம் எதிர்காலத்தை நோக்கி பயணம் செய்ய வேண்டும் என்பதே அத்தகைய வழிகாட்டுதலை இன்று ஹன்ஸா வீக் ஆராய்ச்சி செய்து கொடுத்துள்ளது. தரமான சிறந்த கல்வியை வழங்கும் பல்கலைகழங்கங்களில் சத்தியபாமா கல்வி நிறுவனத்தின் அங்கீகாரம் தற்போது வெளியாகியுள்ளது. 

Leave a Comment