மயிலாடுதுறை அருகே திருமணம் செய்து கொள்ளாமல் கணவன் மனைவி போல் உல்லாசமாக வாழ்ந்து வந்ததால் காதலி கர்ப்பம் அடைந்த நிலையில்,  திருமணம் செய்ய மறுத்த காதலன், தலைமறைவாகி அதன் பிறகு கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

மயிலாடுதுறை அடுத்து உள்ள தரங்கம்பாடி வட்டம் அரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், அங்குள்ள அரசூர் வள்ளுவர் தெருவைச் சேர்ந்த ராஜி என்பவரின் மகன் 28 வயதான வெங்கடேசன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில், அவர்களால் பிரிந்து இருக்க முடியவில்லை.

இதன் காரணமாக, இருவரும் ஒருவரை ஒருவர் பிரிய மனம் இல்லாத காதல் ஏக்கத்தில், இருவருமே தங்கள் வீட்டில் பொய் சொல்லிவிட்டு, அங்குள்ள பக்கத்து ஊரில் காதலர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்வதாக முடிவெடுத்து கணவன் - மனைவி போல் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர். இதனால், காதலர்கள் தினம் தினம் உல்லாச வாழ்க்கையில் இன்புற்றுத் திளைத்தனர். 

இப்படியான இந்த உல்லாச வாழ்க்கை சில மாதங்கள் இன்புற்று கடந்திருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக, அந்த காதலி கர்ப்பம் அடைந்து உள்ளார். 

இதையடுத்து, அந்த காதலி உல்லாச வாழ்க்கையிலிருந்து சற்று நிதானத்திற்கு வந்து, “என்னை உடனே திருமணம் செய்துகொள்” என்று, தனது காதலன் வெங்கடேசனிடம் வலியுறுத்தி இருக்கிறார். 

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த காதலன் வெங்கடேசன், “திருமணம் செய்துகொள்கிறேன்” என்று, அடுத்து சில மாதங்களைக் கடத்தி இருக்கிறார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், திருமணம் செய்துகொள்ளாமல் கணவன் - மனைவி போல் ஒரே வீட்டில் அவர்கள் வாழ்ந்து வருவது, அந்த இளம் பெண்ணின் வீட்டிற்குத் தெரிய வந்தது. அத்துடன், அந்த பெண் கர்ப்பமான நிகழ்வும், அந்த பெண்ணின் வீட்டிற்குத் தெரிய வந்தது. 

இதையறிந்து வெங்கடேசனே உடனே திருமணம் செய்துகொள்ளும் படி, அந்த பெண் வற்புறுத்தத் தொடங்கி உள்ளார். இதனையடுத்து, காதலியுடன் பழகுவதை நிறுத்திக்கொண்டு வெங்கடேசன் தலைமறைவானார். 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த காதலி, காதலன் வெங்கடேசனைக் கண்டுபிடித்து, “திருமணம் செய்துகொள்ளும் படி” மீண்டும் மீண்டும் வலியுறுத்தி உள்ளார். 

இதன் காரணமாக, வேறு வலியின்றி பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு வந்த வெங்கடேசன், “உன்னைத் திருமணம் செய்துகொள்ள முடியாது” என்று, திட்டவட்டமாக மறுத்து உள்ளார். இதனால் கடும் அதிர்ச்சியும், விரக்தியும் அடைந்த அந்த இளம் பெண், தனது பெற்றோரின் ஆலோசனையின் பேரில், கடந்த ஆகஸ்ட் மாதம் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், வெங்கடேசனை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து பேச்சு வார்த்தை நடத்தி உள்ளனர். ஆனால், அப்போதும், “காதலியைத் திருமணம் செய்து கொள்ள முடியாது” என்று, அவர் மறுத்துவிட்டார். 

இதனையடுத்து, “நம்ப வைத்து ஏமாற்றுதல், திருமண ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றியது உட்பட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ்” காவல் துறையினர் வெங்கடேசன் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.