“வாழவே பிடிக்கல.. சாக போறேன்.. ” என்று, வீடியோ பதிவு செய்து அனுப்பி வைத்து விட்டு, வீட்டில் குறட்டை விட்டு தூங்கிய  சூர்யா தேவியை போலீசார் ஸ்கெச் போட்டுத் தூக்கி உள்ளனர்.

கடந்த ஆண்டு, நடிகை வனிதா - சூர்யா தேவி பிரச்சனையைத் தமிழ்நாடே கிட்டதட்ட ஒரு மாத காலமாக வேடிக்கை பார்த்தது. 

நடிகை வனிதா - சூர்யா தேவி சண்டையால், தமிழகத்தின் முக்கிய பிரச்சனையாகப் பார்க்கப்பட்ட கொரோனா வைரஸ் மற்றும் சாத்தான்குளம் லாக்கப் டெத் உள்ளிட்ட பிரச்சனைகளை மறந்து, தமிழக மக்கள் பலரும் வனிதா பிரச்சனையிலேயே அப்போது அதிகம் கவனம் செலுத்தினார்கள். அப்போது தான், சூர்யா தேவி தமிழக மக்களிடம் பிரபலமடைந்தார்.

தற்போது, யூடியூப் சேனல்களில் மிகவும் ஆபாசமாகவும், அறுவறுப்பாகவும் பேசி வரும் டிக்டாக் பிரபலங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.

இப்படியாக, கடந்த சில நாட்களுக்குத் தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் செயலாளரும் ஒருங்கிணைந்த மகளிர் கூட்டமைப்பு தலைவியுமான புனித வள்ளி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். 

அந்த பேட்டியின் போது, "ரவுடி பேபி சூர்யா, திருச்சி சாதனா, திருச்சி இலக்கியா, ஜிபி முத்து உள்ளிட்டோர் பதிவிடும் வீடியோக்கள் மிகவும் மோசமாக உள்ளதாக” குற்றம்சாட்டினார். 

அதே போல், “இவர்கள் அத்தனை பேரும் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆபாசமாகப் பேசி தமிழக கலாச்சாரத்தைச் சீரழிப்பதாக” ராமநாதபுரம் மாவட்ட கீழக்கரை காவல் நிலையத்தில் ஆசிரியர் ஒருவர் புகார் தந்திருந்தார். 

ஆனால் அதன்மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டதா நிலையில், சமீபத்தில் ரவுடி பேசி சூர்யாவுடன் இணைந்து செயலாற்றி வரும் சிக்கந்தர் என்பரை சூர்யா தேவி காலணியால் அடித்து உதைத்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக சிக்கந்தர் அளித்த புகாரின் பேரில் மதுரை சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் போலீசார் தம்மை தேடுவதை அறிந்த சூர்யா தேவி, போலீசாரின் விசாரணையிலிருந்து தப்பிக்கத் தற்கொலை நாடகம் ஆடி உள்ளார்.

அதன் படி, பயபக்தியோடு இருப்பது போல் வீடியோ பதிவிட்டுள்ள சூர்யா தேவி, “நான் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன் என்றும், இனியும் நான் உயிரோடு வாழ விரும்பவில்லை என்றும், அதனால் நான் தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன்” என்றும், அந்த வீடியோவில் பேசி, அந்த வீடியோவை மதுரை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து உள்ளார்.

இதனைப் பார்த்த போலீசார் பரபரப்பான நிலையில், சூர்யா தேவியைத் தேடி அலைந்து உள்ளனர்.

பின்னர், சூர்யா தேவியின் வீட்டிற்கு விரைந்து சென்ற போலீசார், உள்ளே சென்று பார்த்த போது, வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்குப்போடுவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டு, சூர்யா தேவி அங்கேயே குறட்டை விட்டு தூங்கியிருக்கிறார்.

குறிப்பாக, சூர்யா தேவியின் வீட்டின் கதவை போலீசார் உடைத்துக்கொண்டு உள்ளே வந்தது கூட தெரியாமல், அவர் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்திருக்கிறார்.

இதனையடுத்து, சூர்யா தேவியை எழுப்பிய போலீசார், அவரையும் அவரது பிள்ளைகளையும் பக்கத்துத் தெருவில் உள்ள அவரது உறவினர் வீட்டில் விட்டு விட்டு, காவல் நிலையம் திரும்பினர். சூர்யா தேவியின் இந்த தற்கொலை நாடகம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனையடுத்து, வீட்டை விட்டு வௌியே வந்த சூர்யா தேவியை, அப்பகுதி மக்கள் நன்றாக வசைப்பாடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.