அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு நெருக்கமான நிறுவனங்களின் அசுர வளர்ச்சி பெற்று, ஒரே ஆண்டில் 100 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு நெருக்கமான நிறுவனங்களின் கடந்த அதிமுக ஆட்சியன் போது, மின்னல் வேக வளர்ச்சியை அடைந்திருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படடன. 

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இது தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

அதன் படி, கோவையில் எஸ்.பி. வேலுமணிக்கு தொடர்புடைய 35 இடங்களிலும், சென்னையில் 16 இடங்களிலும், இவைத் தவிர திண்டுக்கல், காஞ்சிபுரத்தில் தலா ஒரு இடம் என மொத்தம் 53 இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். 

அதாவது, எஸ்.பி வேலுமணி அமைச்சராக இருந்தபோது, அவருக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு மட்டுமே அதிக அளவில் டெண்டர்கள் கொடுத்ததும், இதற்காகவே பிற நிறுவனங்களை வேண்டும் என்றே புறக்கணித்தும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. 

இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி வேலுமணி உள்பட 17 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து உள்ளனர். இந்த முதல் தகவல் அறிக்கையும் இணையத்தில் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்த 17 பேரில் நிறுவனங்களும், நிறுவனங்களின் பங்குதாரர்கள் மற்றும் நிறுவனர்களும் ஆசர். 

முக்கியமாக, இதில் குறிப்பிட்ட சில நிறுவனங்களின் வருவாய் மட்டும் மின்னல் வேகத்தில், ஒரே ஆண்டில் அசுர வளர்ச்சி அடைந்து உள்ளதும் தெரிய வந்திருக்கிறது. 

குறிப்பாக, எஸ்.பி வேலுமணிக்கு நெருக்கமான கருதப்படுவதாக குற்றம்சாட்டப்படும் நிறுவனங்களின் வளர்ச்சி குறித்து பட்டியலும், தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறன்றன.

அந்த பட்டியலில் படி,

- Aalam Gold and Diamonds Pvt Ltd என்ற நிறுவனம், தொடங்கிய முதல் ஆண்டே 100 கோடி ரூபாய்க்கு வருமானம் ஈட்டி உள்ளது தெரிய வந்திருக்கிறது.

- Vardhan Infrastructure என்ற நிறுவனம், கடந்த 2012 - 2013 ஆம் ஆண்டு வருமானம் 2 கோடி ரூபாயாக இருந்த நிலையில், 2018 - 2019 ஆம் ஆண்டில் அந்த நிறுவனத்தின் வருமானம் 66.72 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

- CR Constructions என்ற நிறுவனத்தின் வளர்ச்சியானது, கடந்த 2012 ஆம் ஆண்டு 38 லட்சமாக இருந்த நிலையில், 2018 ஆம் ஆண்டு 43.56 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.

- அதே போல், கேசிபி எஞ்சினியர்ஸ் என்ற நிறுவனம் கடந்த 2012 ஆம் ஆண்டில் 42 கோடிக்கு வர்த்தகம் செய்து வந்த நிலையில், 2018 ஆம் ஆண்டு 453 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்திருப்பதும் தெரிய வந்திருக்கிறது.

- ஏசிஇ டெக் மெஷினரி என்ற நிறுவனம், 34 கோடிக்கு வர்த்தகம் செய்து வந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு 155 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்து உள்ளது.  

- அதே போல், பி.செந்தில் அன்கோ, வரதன் இன்பராஸ்ட்ரக்சர், ஆலயம் பவுண்டேசன் உள்ளிட்ட நிறுவனங்களின் சொத்துக்களின் மதிப்பும் பல மடங்கு தற்போது அதிகரித்து இருக்கிறது. 

முக்கியமாக, சென்னையில் உள்ள “நமது அம்மா நாளிதழ்” அலுவலகத்திலும், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆக மொத்தமாக, சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் 811 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களை தமக்கு வேண்டியவர்களுக்கு எஸ்.பி. வேலுமணி ஒதுக்கீடு செய்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.

இதன் காரணமாக, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு நெருக்கமான நிறுவனங்களின் மின்னல் வேக வளர்ச்சி குறித்து, வழக்குப் பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத் துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.