டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூபாய் பத்து லட்சம் நிதிஉதவி!

டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூபாய் பத்து லட்சம் நிதிஉதவி! - Daily news

டெல்லி வணிக வளாக தீ விபத்தில் உயிரிழந்தது தொடர்பாக நீதி விசாரணைக்கு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே இயங்கி வரும் வணிக வளாகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 27 பேர் உடல் கருகி பலியாகினர். அத்துடன் 40-கும் மேற்பட்டோர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  அத்துடன் இந்த தீ விபத்தில் மேலும் பலர் உயிரிழக்கலாம் என்று சொல்லப்பட்டது.  

அதாவது டெல்லி தீ விபத்தில்  உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு பிரதமர் நிதியுதவிலிருந்து தலா 2 லட்சம் ரூபாயும்,  காயமுற்றோருக்கு  தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி  தெரிவித்துள்ளார். டெல்லி  தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

அதனைத்தொடர்ந்து டெல்லி வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 27 லிருந்து 30 ஆக உயர்ந்துள்ளது. டெல்லி வணிக வளாக தீ விபத்து தொடர்பாக நீதி விசாரணைக்கு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.  அத்துடன் தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சமும்,  காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.  தீவிபத்து ஏற்பட்ட வணிக வளாகத்தில் நேரில் ஆய்வு செய்து அரவிந்த் கெஜ்ரிவால்  அறிவித்துள்ளார்.
 

Leave a Comment