செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க உத்தேச தேதியை தமிழக அரசு அறிவித்திருக்கும் நிலையில், பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிடப்பட் உள்ளது. 

கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020 ஆம் அண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டது. தற்போது, கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் மீண்டும் பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை பல்வேறு தரப்பினரிடையே தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டது.

இதனையடுத்து, “தமிழகத்தில் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் ஒரு நேரத்தில் 50 விழுக்காடு மாணவர்களுடன், கொரோனா தொற்று குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் துவங்க உத்தேசிக்கப்பட்டு உள்ளதாக” தமிழக அரசு, கடந்த 6 ஆம் தேதி கூறியிருந்தது.

தற்போது தமிழகம் மற்றும் அதன் அண்டை மாநிலங்களில் கொரோனா தொற்று சற்று குறைந்து காணப்படுகிறது. இதனால், அண்டை மாநிலமான ஆந்திராவில்  பள்ளிகள் திறக்கப்படுவதாக அந்த மாநில அரசு கூறியுள்ளது. இதே போல், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்க முன் வந்து உள்ளன. 

மேலும், தமிழகத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9,10,11,12 வகுப்புக்கு பள்ளிகளை திறக்க அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்ட உடன் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மாநில மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை தற்போது வெளியிட்டு உள்ளது.

அதன் படி,

- ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

- 50 சதவீத மாணவர்களுடன் சுழற்சி முறையில் பள்ளிகளில் வகுப்புகளை நடத்த வேண்டும்.

- பள்ளிகளில் கை கழுவுவதற்கு கிருமி நாசினி, சோப்பு உள்ளிட்டவை வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

- பள்ளிகளை திறப்பதற்கு முன்பே வளாகங்களை சுத்தப்படுத்த வேண்டும்.

- மாணவர்கள் 6 அடி இடைவெளியில் அமர்ந்து இருக்வும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

- மருத்துவத்துறை துணை இயக்குனர்கள் பள்ளிகளுக்கு உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

- பள்ளிகள் திறந்து ஒரு வாரத்துக்குள் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும் என்றும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.

- கொரோனா நோய் அறிகுறி உள்ள ஆசிரியர்களோ, மாணவர்களோ பள்ளி வளாகத்துக்குள் அனுமதிக்க கூடாது என்றும், உத்தரவிடப்பட்டுள்ளது.

-  தகுதி உடைய மாணவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போடப்பட வேண்டும் என்றும், வலியுறுத்தப்பட்டுள்ளது.

- மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி தெரிந்தால், உடனே ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும், பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.