சென்னையில் வாடகை வீட்டில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த 8 பெண்கள் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தமிழகம் உட்பட உலகம் முழுவதும் கொரோனா என்னும் கொடிய வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், பொது மக்கள் அனைவரும் சமூக 
இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று மத்திய - மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

ஆனால், இந்தியாவில் நடைபெறும் பாலியல் குற்றங்கள் மற்றும் வன்முறைகளைப் பார்க்கும் போது, இந்த சமூக இடைவெளியை பெரும்பாலானவர்கள் 
கடைப்பிடிக்கவில்லையோ என்ற சந்தேகம் தான் எழுகிறது. தற்போது, அந்த சந்தேகத்தை உண்மையாக்கும் விதமாக, சென்னையில் வீடு வாடகைக்கு எடுத்து, யாருக்கும் ரகசியமாக பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சென்னை கோவிலம்பாக்கத்தில் மோகன், சுந்தர், ராஜேஷ் ஆகிய 3 பேரும் சேர்ந்து, வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துத் தங்கி உள்ளனர்.அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்குச் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக, தங்கள் உறவினர் என்று கூறி, அந்த வீட்டில் சில பெண்களைத் தங்க வைத்து வந்துள்ளனர். 

அதன்படி, அங்குத் தங்கி இருந்த பெண்களும், அவ்வப்போது அங்கு வந்து செல்லும் பெண்களும் தொடர்ந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்து உள்ளனர்.

இது தொடர்பான தகவல் போலீசாருக்கு ரகசியமாகக் கிடைத்தது. இதனையடுத்து, மப்டியில் வந்த போலீசார் வாடிக்கையாளர் போல் அந்த பாலியல் தொழில் செய்து வரும் கும்பலிடம் பேச்சுக் கொடுத்துள்ளனர். அதன் படி, அவர்களும் பாலியல் உல்லாசத்தில் ஈடுபட ரேட் பேசி உள்ளனர். அதன்படி, அவர்களிடம் பணத்தைக் கொடுத்து, உள்ளே சென்ற போலீசா், அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்டு இருந்தவர்களை அதிரடியாகக் கைது செய்தனர்.

அதன்படி, அந்த விட்டில் மொத்தம் 8 பெண்கள் பாலியல் தொழில் செய்து வந்தனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். அத்துடன், அந்த 8 
பெண்களையும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 3 புரோக்கர்களையும் போலீசார் கைது செய்தனர். 

இதனையடுத்து, கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்குப் பிறகு, புரோக்கர்களையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.

மேலும், கைது செய்யப்பட்ட 8 பெண்களையும், மயிலாப்பூரில் உள்ள அரசு இல்லத்தில் ஒப்படைக்கப் பட்டனர். இதனால், கோவிலம்பாக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வீட்டின் அக்கம் பக்கத்தில் வசித்தவர்கள் கடும் பீதியடைந்தனர். 

அதே போல், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இபாஸ் இல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இளம் பெண்களை அழைத்து வந்து, மிகவும் ஹைடெக் முறையில் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்த 3 புரோக்கர்கள் உட்பட 7 பேரை, நேற்று முன் தினம் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

அத்துடன், கைது செய்யப்பட்ட புரோக்கர்களிடமிருந்து பல்வேறு இளம் பெண்களின் புகைப்படங்களையும் போலீசார் பறிமுதல் செய்து, அது தொடர்பாகவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.