பேட்ட படத்தின் வெற்றியை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் தனது அடுத்த படத்தில் தனுஷுடன் இணைகிறார்.2016-லேயே தொடங்க வேண்டிய இந்த படம் சில காரணங்களால் தள்ளி போனது.Y Not ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தில் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி ஹீரோயினாக நடித்துள்ளார்.

சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்,இந்த படத்தில் கலையரசன்,மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ்,சஞ்சனா நடராஜன்,ஜேம்ஸ் காஸ்மோ,அஸ்வந்த் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் 80% படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றது.இந்த படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக நிறைவடைந்துள்ளது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்திற்கு ஜகமே தந்திரம் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தின் மோஷன் போஸ்டரில் இடம்பெற்ற தீம் பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் மே 1ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது ஆனால் கொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

தனுஷ் பிறந்தநாள் கடந்த ஜூலை 28ஆம் தேதி முடிந்தது.இதனை முன்னிட்டு இந்த படத்தின் முதல் பாடலான ரகிட ரகிட என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர்.இந்த பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்து வருகிறது.இந்த பாடல் ரிலீசானது முதல் தற்போது வரை 10 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

விஜய் டிவியின் பிரபல தொடர்களில் ஒன்று தேன்மொழி.விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளியான ஜாக்குலின் இந்த தொடரின் நாயகியாக நடித்து வருகிறார்.சித்தார்த் இந்த தொடரின் நாயகியாக அசத்தி வருகிறார்.இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த தொடரின் ஷூட்டிங் லாக்டவுனை தொடர்ந்து சமீபத்தில் ஆரம்பித்து விறுவிறுப்பாக சென்று வருகிறது.

இந்த தொடரின் புதிய எபிசோடுகளின் ஒளிபரப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தற்போது இந்த தொடரின் ஷூட்டிங் வீடியோ ஒன்றை தொடரின் நாயகி ஜாக்குலின் பகிர்ந்துள்ளார்.ஷூட்டிங்கில் உடன் பணிபுரியும் நடிகையுடன் இணைந்து ஜகமே தந்திரம் படத்தின் ரகிட ரகிட பாடலுக்கு ரகளயாக ரீல்ஸ் வீடியோ ஒன்றை செய்து பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.