நாகர்கோவிலில் மனைவியோடு கள்ளக் காதலன் படுக்கையில் இருந்ததை பார்த்த கணவன், மனைவியை குத்தி கொலை செய்துள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்துள்ள ஆசாரிப்பள்ளம் வசந்தம் நகரைச் சேர்ந்த 42 வயதான நீலாவதி, அதே குதியில் உள்ள பேக்கரியில் உதவியாளராக வேலை செய்து வந்தார்.

நீலாவதியின் கணவர் ராமதாஸ் அதே பகுதியில் மரக்கடை தொழில் செய்து வருகிறார். ராமதாஸ் - நீலாவதி தம்பதிக்கு தற்போது 19 வயதில் அஜித் என்ற மகன் உள்ளான்.  

இதனிடையே, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, நீலாவதிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் நெருங்கிப் பழகி வந்த விசயம் கணவர் ராமதாஸ்க்கு தெரிய வந்தது. இதனையடுத்து, மனைவி அவர் கண்டித்துள்ளார். இதன் காரணமாக, கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து, தனது மகனை அழைத்துக்கொண்டு, நீலாவதி கணவனைப் பிரிந்து தனியாகச் சென்றுவிட்டார். ஆனாலும், இவர்கள் முறைப்படி நீதிமன்றம் சென்று விவகாரத்து வாங்காத நிலையில், உறவினர்கள் மூலமாகப் பேசி பிரிந்து சென்றதாகவும் கூறப்படுகிறது. 

கணவன் - மனைவி இருவரும் பிரிந்து சென்ற பிறகு, அவர்களுக்குள் எந்தவித பேச்சு வார்த்தையும் இல்லை. ஆனால், தன் மகன் அஜித்துடன் தந்தை ராமதாஸ் தொடர்பில் இருந்துள்ளார். அவ்வப்போது, வந்து பேசிவிட்டு, நல்லது கெட்டது செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.

இப்படிக் கடந்த 3 ஆண்டுகளாகக் கணவன் - மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், நேற்று அதிகாலை 2 மணி அளவில் பணி நிமிர்த்தமாக மனைவியின் வீட்டைக் கடந்து இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, அந்த நேரத்திலும் மனைவியின் படுக்கை அறையில் லைட் எரிந்துகொண்டு இருந்துள்ளது.

இதனைப் பார்த்து சந்தேகம் அடைந்த ராமதாஸ், வண்டியைவிட்டு இறங்கி வீட்டினுள் சென்று பார்த்துள்ளார். அப்போது, மனைவி நீலாவதி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இளைஞருடன் பார்த்து கண்டித்த அந்த இளைஞனுடன் உல்லாசமாக இருந்ததாகத் தெரிகிறது.

இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த ராமதாஸ், அங்குக் கிடந்த கட்டையை எடுத்து அந்த இளைஞரைக் கடுமையாகத் தாக்கி உள்ளார். இதில், காயம் அடைந்த அவர், அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். இதனையடுத்து, வீட்டில் இருந்த கத்தியை எடுத்த, மனைவியை குத்தி கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த நீலாவதி, பரிதாபமாக அங்கேயே விழுந்து உயிரிழந்தார்.

காலையில் விடிந்ததும், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், இரவு பணிக்குச் சென்றிருந்த மகனை அழைத்து விசாரித்துள்ளனர். அப்போது, “இது குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது” என்று சமாளித்துள்ளதாகத் தெரிகிறது.

எனினும், “பாவப்பட்ட தன் மகனை போலீசார் விசாரிப்பதை அறிந்த தந்தை ராமதாஸ், தன் மகனை காப்பாற்றும் நோக்கில், “நான் தான் என் மனைவியை கொன்றேன்” என்று போலீசாரிடம் நேரில் வந்து சரணடைந்தார். இதனையடுத்து, அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.