கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த கணவனின் கழுத்தை கயிற்றால் இறுக்கியும், தலையணையைக் கொண்டு முகத்தை அமுக்கியும் மனைவி கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோட்டில் மாவட்டத்தில் தான் இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணை அடுத்து உள்ள காவிரி புரம் தெலுங்கனூரை சேர்ந்த 35 வயதான குழந்தைவேல் - தனலட்சுமி தம்பதியினர் வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர்.

35 வயதான குழந்தைவேலு, வேலை விசயமாக ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்து உள்ள ஈங்கூர் நல்லமுத்தாம் பாளையத்தில், தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். 

அத்துடன், குழந்தைவேலு அந்த பகுதியில் வேன் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார்.

தற்போது தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கால் குழந்தைவேலு வேலை இன்றி தவித்து உள்ளார். இதனையடுத்து, குடும்ப செலவுகளை சமாளிக்க குழந்தைவேல், தனது வண்டியில் பழ வியாபாரம் செய்து வந்தார். 

அப்போது, அங்குள்ள நுங்கம்பாடியை சேர்ந்த 35 வயதான கவியரசு என்பவர், அவருக்கு அறிமுகம் ஆகி உள்ளார். இதனையடுத்து, அவர்கள் இருவரும் ஏற்பட்டு, நெருங்கிய நண்பர்களாகப் பழகி வந்தனர். 

இந்த சூழ்நிலையில் தான், குழந்தைவேலுக்கு திடீரென்று உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால், குழந்தைவேலுவை பார்க்க, அவரது புதிய கூட்டாளி கவியரசு அடிக்கடி அவர் வீட்டுக்கு வந்து சென்று உள்ளார். 

அப்போது, குழந்தைவேலுவின் மனைவி தனலட்சுமிக்கும், கவியரசுக்கும் பழக்கம் ஏற்பட்டு, அந்த பழக்கமே நாளடைவில் கள்ளக் காதலாக மாறி உள்ளது.

இதன் காரணமாக, கள்ளக் காதலர்களான தனலட்சுமியும் - கவியரசும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.மனைவியின் கள்ளக் காதல் விசயம் கணவன் குழந்தை வேலுவுக்கு தெரிய வந்துள்ளது. இதனால், கணவன் - மனைவி இடையே பிரச்சனை எழுந்து உள்ளது.

இதனையடுத்து, கள்ளக் காதலுக்கு இடையூறாக உள்ள கணவன் குழந்தைவேலுவை கொலை செய்ய அவரது மனைவி முடிவு செய்து உள்ளார்.

அதன் படி, தனது கள்ளக் காதலன் உடன் சேர்ந்து அவர் திட்டம் தீட்டி உள்ளார். திட்டமிட்டபடி, கடந்த 28 ஆம் தேதி இரவு வீட்டில் உடல் நலம் பாதிக்கப்பட்டுத் தூங்கிக் கொண்டிருந்த கணவன் குழந்தை வேலுவை, அவரது மனைவி தனலட்சுமி மற்றும் கள்ளக் காதலன் கவியரசு ஆகிய இருவரம் சேர்ந்து, நைலான் கயிற்றால் குழந்தை வேலுவின் கழுத்தை இறுக்கி உள்ளனர். அப்போது, அவர் தொடர்ந்து முரண்டு பிடித்ததால், தலையணையை கொண்டு அவரது முகத்தை அமுக்கியும் பிடித்து கொன்று உள்ளனர். இதில், குழந்தை வேலு மூச்சி முட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து, ஒன்றுமே நடக்காதது போல் “என் கணவர் உடல் நலமின்றி உயிரிழந்து விட்டதாக” அக்கம் பக்கத்தினரிடம் கூறி தனலட்சுமி நாடகம் ஆடி வந்திருக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக, இறுதிச் சடங்கிற்காகக் கணவனின் சொந்த ஊருக்கு உடலை கொண்டு சென்றபோது, உயிரிந்த குழந்தைவேலுவின் கழுத்தில் காயங்கள் இருப்பதைக் கண்ட அவரது அண்ணன் மாதேஷ், இது குறித்து உடனடியாக சென்னிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இது குறித்து அங்கு விரைந்துவந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து, தனலட்சுமி மற்றும் அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். 

மேலும், சந்தேகத்தின் பேரில் தனலட்சுமியிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், “கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை, மனைவியே கொன்றது” தெரிய வந்தது.

இதனையடுத்து, கணவனை கொன்ற மனைவி தனலட்சுமி, அவரது கள்ளக் காதலன் கவியரசுவை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் முழுமையாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.