அரசியல் தலைவர் படத்தை மார்பிங் செய்து பதிவிட்ட பாஜக பெண் கவுன்சிலர் அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளார். 

மும்பையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.

தமிழ் சினிமாவில் பொதுவாக சில காமெடி காட்சிகளை நாம் பார்ப்பது உண்டு. ஒரு டுபாகூர் மனிதன், உலக அளவில் புகழ் பெற்று திகழும் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் என பலருடனும் தான் ஒன்றாக சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டது போல், அந்த போட்டோக்களை பிறர் பார்க்கும் படி வைத்திருப்பார்கள். இந்த காட்சிகளை எல்லாம் நாம் சினிமாவில் பார்த்து சிரித்திருக்கிறோம்.

இதே காட்சிகள் நிஜ வாழ்க்கையில் நடந்தால்? அதை ஒரு அரசியல் பிரமுகர் செய்தால்? எப்படி இருக்கும் என்பதற்கு உதாரணமாக தான், மும்பையில் அப்படி ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை காந்திவிலி பகுதி மாநகராட்சி கவுன்சிலராக பாஜக வை சேர்ந்த சுரேகா பாட்டீல் என்ற பெண்மணி இருந்து வருகிறார்.

பாஜக பெண் கவுன்சிலர் சுரேகா பாட்டீல், காந்திவிலியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று உள்ளார். அப்போது, அங்கு இருந்த ஒரு பிரபலமான அரசியல் தலைவர் படத்தை, அந்த பெண் கவுன்சிலர் தனது செல்போனில் படம் பிடித்து கொண்டதாக தெரிகிறது. 

இதனையடுத்து, அந்த படத்தை மார்பிங் செய்து, அந்த பெண் கவுன்சிலர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்து உள்ளார்.

இந்த ஃபேஸ்புக் பதிவு பலருடைய கவனத்தையும் பெற்றது. இதனால், அவர் மீது எதிர்மறையான விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டன.

அத்துடன், இது குறித்து மும்பையில் உள்ள சாம்தா நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், “வேண்டும் என்றே மத உணர்வுகளை புண்படுத்தியது உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு” செய்தனர்.
 
மேலும், இந்த வழக்கு அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், போலீசார் வேறு வழியின்றி பாஜக பெண் கவுன்சிலர் சுரேகா பாட்டீலை அதிரடியாக கைது செய்தனர்.

இதனிடையே, புகழ் பெற்ற அரசியல் தலைவர் ஒருவரின் படத்தை மார்பிங் செய்து, ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்ததற்காக பாஜக பெண் கவுன்சிலர் கைது செய்யப்பட்ட சம்பவம், மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன், இந்த நிகழ்வு பாஜக தொண்டர்கள் மத்தியில் பேசும் பொருளமாக மாறி உள்ளது. இதனால், பாஜகவை சேர்ந்த பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

அதே போல், தமிழகத்தில் டிக்டாக் புகழ் தேனி நாகலாபுரம் சுகந்தியின் காணொலிகளைத் தரவிறக்கம் செய்து, அதனை ஆபாசமாகச் சித்திரித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்ததாக டிக்டாக் ராணி திவ்யா கள்ளச்சி உள்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.