கணவரை விட்டு கள்ளக்காதலனுடன் வாழ்ந்த பெண்ணை, 10 ஆண்டுகள் கழித்து அவரது தம்பி வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த சிந்துபட்டி பெரிய வாகைக்குளத்தைச் சேர்ந்த 40 வயதான கருப்பசாமிக்கு திருமணமாகி, 40 வயதில் மனைவி செல்வி உள்ளார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

Madurai couple murdered for affair

இதனிடையே, செல்விக்கு அதே பகுதியைச் சேர்ந்த முருகனுடன் அறிமுகம் ஏற்பட்டு, பின்னர் அது கள்ளக் காதலாக மாறி உள்ளது. இதனால், அவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து, உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த உல்லாச வாழ்க்கை செல்விக்கு மிகவும் பிடித்து விட்டதாக தெரிகிறது. 

பின்னர், செல்வி தன்னுடைய 2 குழந்தைகளையும் தனியாகத் தவிக்க விட்டு விட்டு, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். 

இதனையடுத்து, திருப்பூருக்குச் சென்ற செல்வி, அங்கு முருகனுடன் சில ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்துள்ளார். அத்துடன், இவர்கள் இருவரும், அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, திருப்பூரில் வேலை பார்த்து வந்த அனைவரும் கடந்த சில வாரங்களாகச் சொந்த ஊர்களுக்குத் திரும்பி அனுப்பப்பட்டு வந்தனர். 

இதனால், செல்வியும் - முருகனும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வாகைக்குளம் என்னும் ஊரில் உள்ள முருகன் வீட்டிற்கு வருகை தந்தனர். இந்த தகவல், செல்வியின் உறவினர்களாக்கு தெரியவந்தது.

Madurai couple murdered for affair

இதனையடுத்து, அதிகாலை நேரத்தில் முருகனின் வீட்டுக்குள் புகுந்த சிலர், செல்வியையும் - முருகனையும் சரமாரியாக அரிவாளால் வெட்டி உள்ளனர். பின்னர், அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். 

இதனிடையே, செல்வி - முருகனின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்துள்ளனர். அப்போது, செல்வியும் - முருகனும் 

ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளனர். இதனையடுத்து, அவர்கள் இருவரையும் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே செல்வி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால், முருகன் மட்டும் பலத்த காயங்களுடன் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். 

Madurai couple murdered for affair

விசாரணையில், “செல்வியின் சித்தி மகன் அருண், தனது உறவினர்கள் சிலருடன் சேர்ந்து செல்வியை வெட்டிக் கொலை செய்தது உறுதி” செய்யப்பட்டது.

இதனையடுத்து, அருணை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதனிடையே, கணவரை விட்டு கள்ளக்காதலனுடன் வாழ்ந்த பெண்ணை, 10 ஆண்டுகள் கழித்து அவரது தம்பி வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.