பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பசு மாடுகள் மீது ஒரு தனி கவனம் செலுத்தி வருகிறது.”மாட்டினை உண்மையிலேயே தாயாக கருதினால் தனது தாயை ஏற்றுமதி செய்யும் ஒரு கூட்டத்திற்கு ஏன் ஓட்டு போட்டு பதவியில் ஏற்றியிருக்கின்றார்கள். மாட்டு கறி சாப்பிடும் அல்லது விநியோகம் செய்யும் முஸ்லீம்ங்கள் மீது மட்டும் வன்முறையை ஏவுகிறார்கள். ஆனால் பசுகளை முறையாக பாதுக்கப்பதில் பாஜகவுக்கு எந்த அக்கறையும் கிடையாது “ என்று பாஜக அரசின் மீது பெரிய அளவில் குற்றசாட்டு உண்டு. 


உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மாட்டு அரசியல் செய்கிறார். அதனால்  பல வன்முறைகளை நேரடியாக ஊக்குவிக்கிறார் என இந்திய அளவில் விமர்சனம் இருந்துவருகிறது.

தற்பொழுது குளிர்காலம் தொடங்கி இருக்கிறது. மாடுகளை பாதுக்காக உத்தரப்பிரதேச மாநில அரசு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. குளுரிலிருந்து மாடுகளை பாதுகாக்க மாடுகளுக்கு கோட் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து இருக்கிறார் யோகி ஆதித்யநாத். 


உத்தரப்பிரதேச அரசு நடத்தும் பசு முகாம்களில் உள்ள பசுக்களுக்கு சணல் பைகளை கொண்டு பசுக்களுக்கான மேல் கோட்டுகள், திரைச்சீலைகள் போன்றவற்றை வழங்க வேண்டும் எனவும் அவற்றை தயாரிக்கும் பணிகள் உடனடியாக தொடங்க வேண்டும் எனவும் மாநில கால்நடை பராமரிப்புத்துறை மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.