நேற்று சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளின் பதவியேற்பு விழா நடந்தது. மொத்தம் 10 நீதிபதிகள் பதவியேற்றார்கள். இதில் 4பெண் நீதிபதிகள் பதவியேற்றார்கள். ஏற்கனவே 9 பெண் நீதிபதிகள் இருக்கிறார்கள்.  இதனால் நாட்டிலேயே அதிக பெண் நீதிபதிகள் கொண்ட உயர்நீதிமன்ற என்ற பெருமையை சென்னை உயர்நீதிமன்றம் பெருகிறது.

புதிய நீதிபதிகளுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலலைமை நீதிபதி ஏ.பி.சாஹி பதிவிபிரமாணம் செய்துவைத்தார். புதிய நீதிபதிகளை சேர்த்து சென்னை உயர்நீதிபதிகளின் எண்ணைக்கை தற்பொழுது 63- ஆக உயர்ந்திருக்கிறது. 


இந்த பதவியேற்வு விழாவின் மற்றொரு சிறபம்சம், கணவன் மனைவி ஒரே நேரத்தில் பதவியேற்று இருப்பது தான். இதற்கு நீதிமன்ற வரலாற்றில் இதுப்போன்று கணவன் , மனைவி இருவரும் ஒரே நேரத்தில் பதவியேற்றத்தில். எனவே இதுதான் வரலாற்றில் முதல் முறை ! 


கீழ் நீதிமன்றத்தில் கணவன் மனைவி நீதிபதிகளாக பதவியேற்று புதிய வரலாற்றை படைத்தவர்கள்  நீதிபதிகள் கே.முரளிசங்கர், எஸ்.டி.தமிழ்செல்வி ஆவர். நீதிபதிகள் கே.முரளிசங்கர், எஸ்.டி.தமிழ்செல்வி இருவரும் 1995ம் ஆண்டு மாஜிஸ்திரேட்டு பதவிக்கு தேர்வு செய்யப்பட்டனர். திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதியாக கே.முரளிசங்கரும் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதித்துறை பதிவாளராக நீதிபதி எஸ்.டி.தமிழ்செல்வியும் பணியாற்றி வந்தனர். தற்போது பதவி உயர்வு பெற்று மாவட்ட முதன்மை நீதிபதியாக உள்ளனர்.

 


1996ல் இருவருக்கும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள். மகளும் சட்டப்படிப்பையே தேர்வு செய்து படித்து வருகிறார். நாட்டிலேயே அதிக பெண் நீதிபதிகள் கொண்ட உயர்நீதிமன்ற என்ற பெருமை மற்றும் கணவன் மனைவி ஒரு நேரத்தில் நீதிபதிகளாக பதிவியேற்றது என நேற்று புதிய நீதிபதிகள் பதவியேற்பு விழா சிறப்பு பெற்றதாக அமைந்தது.