சென்னையில் காற்று மாசானது, அனுமதிக்கப்பட்ட அளவை விட 4 மடங்கு உயர்ந்துள்ளது பொது மக்களை கடும் அதிர்ச்சியிலும், கவலையிலும் ஆழ்த்தி உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கடைசி வாரம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
 
இதனால், இந்தியாவில் சுமார் 130 கோடி மக்கள் வீடுகளிலேயே முடங்கிப் போனார்கள். அப்போது, இந்தியா முழுவதும் எந்த பகுதியிலும் 99 சதவீதம் அளவுக்கு
வாகனங்கள் இயங்காமல் இருந்தன. பேருந்து, ரயில், விமானம், கார், ஆட்டோ உள்ளிட்ட எந்த வாகனமும் இயங்கவில்லை.

குறிப்பாக, ஊரடங்கால் இந்தியாவில் புகையை வெளியேற்றும் எந்த ஒரு தொழிற்சாலைகளும் செயல்படவில்லை. இதனால், காற்றின் தரத்தைக் குறைக்கக் கூடிய
நுண்துகள்கள், கார்பன் மோனாக்சைடு, கந்தக டை ஆக்சைடு ஆகியவற்றின் வெளிப்பாடு குறைந்து காற்றின் தரம் ஒரே அடியாக கிடுகிடுவென உயர்ந்தது.

தனால், தலைநகர் டெல்லி உட்பட இந்தியாவின் சுமார் 92 நகரங்களில் நல்ல காற்று நிலவுவதாகவும், காற்று மாசு முற்றிலும் குறைந்து காணப்படுவதாகவும் மத்திய
மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அப்போது, அறிவித்தது. 

பின்னர், கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தமிழகம் உட்பட நாடு முழுவதும் 2 வது அலையாக பரவத் தொடங்கி தற்போது படிப்படியாக குறைந்துள்ளது.
இதனால், 2 வது முறையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, பல தளர்வுகளும் அளிக்கப்பட்டு, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளது.

அதே நேரத்தில், தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகரம், இந்திய அளவில் 4 முக்கிய மெட்ரோபாலிடன் நகரங்களில் ஒன்றாக திகழ்கிறது. 

முக்கியமாக, குறைந்த பரப்பளவு, அதிக அளவிலான மக்கள் நெருக்கடி நிறைந்த நகராக திகழும் சென்னையில் வாகன போக்குவரத்து, தொழிற்சாலைகள் ஆகியவற்றின் காரணமகா, காற்று மாசு தரம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது.

இதன் காரணமாக, பொது மக்களின் வாழ்க்கை தரம் மிகவும் மோசமானதாக மாறி உள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் கொரோனா 2 வது அலையில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களே அதிக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கைளை கொண்டிருந்த நிலையில், “ஆரோக்கிய திறனுக்கான முன்முயற்சி” என்கிற அமைப்பு சென்னையில் திரிசூலம், பாரிமுனை, காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர் அனல் மின்நிலையம், சேப்பாக்கம், வேளச்சேரி, தி.நகர் உள்ளிட்ட 20 இடங்களை ஆய்வுக்கு உட்படுத்தியது.

அதன் படி, கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் 24 மணி நேர தொடர் காற்று தர பரிசோதனை நடத்தப்பட்டது.

அப்போது, ஒரு கன மீட்டர் காற்றில் 2.5 மைக்ரான் அளவு கொண்ட காற்றில் மிதக்கும் நுண் துகள்களின் அளவு 60 மைக்ரோ கிராம் வரை இருப்பது தெரிய வந்தது. இது, அனுமதிக்கப்பட்ட அளவு என்று கூறப்படுகிறது. 

ஆனால், “இந்த ஆய்வில் அனுமதிக்கப்பட்ட மாசு அளவை விட 4 மடங்கு அதிகமாக மாசு பதிவாகி இருப்பதாகவும்” அந்த அமைப்பு கவலைத் தெரிவித்து உள்ளது.

அதிலும், சென்னையிலேயே அதிக அளவிலான மாசு; திரிசூலம், பாரிமுனை, வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட ஆய்வில் 176 மைக்ரோ கிராம் முதல் 228 மைக்ரோ கிராம் வரை காற்று மாசு படிந்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

மேலும், சென்னையின் முக்கிய பகுதிகளான திருவொற்றியூர், காசிமேடு, துரைப்பாக்கம் குருவிமேடு, சோழிங்கநல்லூர், வேளச்சேரி, நொச்சிக்குப்பம், கொடுங்கையூர் மீஞ்சூர், உர்ணாம்பேடு, செப்பாக்கம், பெரும்புதூர், தியாகரயநகர், அத்திப்பேடு, காட்டுக்குப்பம், அம்பத்தூர் ஆகிய இடங்களில் பிஎம் 2.5 மாசு 59 முதல் 128 மைக்ரோகிராமாக இருந்தது ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. 

குறிப்பாக, இந்த ஆய்வு முடிவுகளானது, அமெரிக்க காற்று தர நிர்ணய விதிகளின் படி, “ஆரோக்கியமற்ற நிலை என்றும், இந்த பகுதியில் வாழும் பொது மக்களின் இதயம் அல்லது நுரையீரல் பிரச்சினை உள்ளவர்களாக இருப்பார்கள்” என்றும்,  கூறப்படுகிறது. 

அத்துடன், “வயதானவர்கள், சிறார்கள் உடல் ரீதியான செயல்பாடுகளை அதிகம் மேற்கொள்ள கூடாது” என அந்த விதிகளில் கூறப்பட்டு உள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் தற்போது சென்னை வாழ் மக்களை பெரிதும் கவலைக்கு உள்ளாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.