திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்த கள்ளக் காதலன் பேச மறுத்ததால், கள்ளக் காதலி வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கே.வி.கோட்டையை சேர்ந்த 32 வயதான ராஜேஸ்வரிக்கும், அதேப் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது. 

திருமணத்திற்குப் பிறகு மிகவும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்த இந்த தம்பதிக்கு 2 மகன்கள் பிறந்தனர். அதன் பிறகு, கணவன் - மனைவி இடையே தொடர்ந்து சண்டை வந்துள்ளது. இதனால், கணவன் - மனைவி இருவரும் நிம்மதி இன்றி தவித்துள்ளனர்.

இதன் காரணமாக, கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், கணவனை விட்டுப் பிரிந்து சென்ற ராஜேஸ்வரி, காரைக்குடிக்கு இடம் பெயர்ந்து அங்குத் தனியாக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார்.

அப்போது, அங்குள்ள கே.வி.கோட்டையைச் சேர்ந்த பிரபுதேவா என்பவருடன் ராஜேஸ்வரிக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இதனால், இருவரும் தொடக்கத்தில் நட்பாகப் பழகத் தொடங்கினர். இதனால், அடிக்கடி போனில் பேசி பழகி வந்த அவர்களுக்குள் கள்ளக் காதல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

தற்போது கொரோனா நோய் பரவல் காரணமாகப் பலரும் தாம்பத்தியம் உள்ளிட்ட சில விசயங்களில் இருந்து விலகி இருந்து வருகின்றனர். பிரபுதேவாவும், கடந்த சில நாட்களாக ராஜேஸ்வரியிடமிருந்து விலகி இருந்ததாகத் தெரிகிறது. 

அத்துடன், ராஜேஸ்வரி அடிக்கடி போன் செய்து, “என்னை பார்க்க வா” என்று, தொடர்ந்து வற்புறுத்தி  தொந்தரவு செய்ததால், தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார் பிரபுதேவா. இதனால், ராஜேஸ்வரி கடும் விரக்தி அடைந்ததாகத் தெரிகிறது. இதன் காரணமாக, ராஜேஸ்வரி கடும் மன உளைச்சலுக்கு ஆளானார் என்றும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, தற்கொலை செய்து கொள்வதாக வீடியோ ஒன்றைப் பதிவு செய்து, அதை வாட்ஸ்ஆப் மூலமாக பிரபுதேவாவுக்கு அனுப்பி விட்டு, அதன் பிறகுத் தன் வீட்டின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அந்த வீடியோவில், “ நீ இல்லாம என்னால் இருக்க முடியாது. எனக்கு உன்னை விட்டால் யாரும் இல்லை. நான் இருப்பதால் தான், உனக்கு இவ்வளவு கஷ்டம். உன் செல்போனையும் சுவிட்ச் ஆப் செய்து வச்சிருக்க. என்னை நீ வேண்டாம் என்ற முடிவு செய்துவிட்டாய். இனி, என்னால் உனக்குத் தொந்தரவு இருக்காது” என்று, அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.

இந்த வீடியோவை பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த பிரபுதேவா, வீட்டின் உரிமையாளருக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். இதனையடுத்து, வீட்டின் உரிமையாளர் அந்த வீட்டின் கதவைத் திறந்து பார்த்து உள்ளார். இப்போது ராஜேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. 

மேலும், உயிரிழந்த ராஜேஸ்வரியின் சகோதரர் கார்த்திக் ராஜா அளித்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.