12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை அவரது தம்பியே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வட மாநிலங்களில் வழக்கமாக அரங்கேறும் இது போன்ற பாலியல் பலாத்கார சம்பவங்கள் இந்த முறை திருச்சி மாவட்டத்தில் அரங்கேறி அனைத்து தரப்பினரையும் 
கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி, அங்குள்ள அரசுப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு
படித்து வருகிறார்.

தற்போது, கொரோனா காரணமாகப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதால், அந்த சிறுமி தனது பெற்றோருடன் வீட்டிலேயே இருந்து வந்தார்.

இப்படியாக, வீட்டிலேயே இருந்து வந்த அந்த மாணவி, அங்குள்ள தொட்டியத்தில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு சென்று உள்ளார். அப்போது, அந்த உறவினர்
வீட்டில் தம்பி முறையிலான 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன், அந்த  வீட்டில் இருந்திருக்கிறான்.

அந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் அக்கா முறையிலான அந்த பெண், அங்கு வந்தது முதல், அந்த மாணவி மீது ஒரு கண் வைத்த தம்பி முறையிலான அந்த 10 ஆம் வகுப்பு மாணவன், மிகுந்த பலமடைந்திருக்கிறான்.

இதனையடுத்து, வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, அக்கா முறையிலான அந்த மாணவியை, தம்பி முறையிலான அந்த 10 ஆம் வகுப்பு மாணவன் மிரட்டியே
பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறான்.

இதன் காரணமாக, அடுத்த சில மாதங்களில் அந்த மாணவி கர்ப்பமடைந்திருக்கிறார். இதனால், பயந்து போன அந்த மாணவி, இது தொடர்பாக தனது பெற்றோரிடம்
எதுவும் கூறாமல் இருந்து வந்திருக்கிறார்.

பின்னர், மாணவியின் பெற்றோருக்குத் தெரிய வந்த நிலையில், கடும்  அதிர்ச்சியடைந்து, மகளிடம் விசாரித்து உள்ளனர். அப்போது, தன்னை பலாத்காரம் செய்தது,
தம்பி தான் என்று, அவனது பெயரையும் கூறி அழுதிருக்கிறார்.

இதனால், மேற்கொண்டு என்ன செய்து என்று தெரியாமல் மாணவியின் பெற்றோர் குழப்பத்தில் இருந்து வந்த நிலையில், இந்த சூழலில் தான் கர்ப்பமடைந்த மாணவி, திருச்சி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு குழந்தை பிறந்த நிலையில், மாணவிக்கு 17 வயதே ஆகியது மருத்துவர்களுக்குத் தெரிய வந்தது. இதனை அடுத்து, மருத்துவமனை சார்பில்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு உதவி மையத்திற்குத் தகவல் அளித்தனர். 

குழந்தை பாதுகாப்பு அதிகாரிகள், முசிறி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்த நிலையில், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த
போலீசார், மருத்துவமனைக்கு வந்து குழந்தை பெற்றெடுத்த மாணவியிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, 12 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு, தம்பி முறையிலான அவரது உறவுக்கார சிறுவனே பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதனை அடுத்து, சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவனைக் கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிறுத்தி பின்னர் திருச்சி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.