அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு உறுதியாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இது சாத்தியமில்லை என்ற விமர்சனம் இருந்தாலும் கூட போட்டி தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று உள்ளது. 

மேலும் இந்த பெண்கள் முன்னேற்றம், நெசவாளர்கள் நலன், விவசாயிகள் வளம் பெறுவதற்கான பல்வேறு திட்டங்கள் இதில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல் முறை வாக்காளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை வளம் பெறச் செய்வதற்கான திட்டங்கள் அ.தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.   18 வயது உடையவர்களுக்குக் கட்டணம் ஏதும் இல்லாமல் வாகன பயிற்சியுடன் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும். 

தனியார் நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி உறுதி என்ற அறிவிப்புகள் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. அதேபோல், வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை இரண்டு மடங்காக உயர்த்தி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் மாணவர்களுக்கென தனியாகப் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள், இளைஞர்கள் என இளம் வயதினரை அ.தி.மு.க தேர்தல் அறிக்கை வெகுவாக கவர்ந்துள்ளது என அதிமுக தரப்பினர்கள் கூறுகிறார்கள்.