ஆபாசப் படங்களுக்கும், கஞ்சாவுக்கும் அடிமையான 17 வயது சிறுவன் ஒருவன், 6 ஆம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி மிகவும் கொடூரமாக முறையில் கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்து உள்ள கிராமத்தை சேர்ந்த 11 வயது சிறுமி, தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி, அங்குள்ள பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இப்படியான சூழலில், கடந்த 29 ஆம் தேதி மாலை, அந்த சிறுமி தனது தாயாருடன் கடைக்கு சென்று உள்ளார். கடைக்கு சென்ற போது, தனது மகளை வீட்டுக்கு செல்லும்படி கூறி விட்டு, அவர் சொந்தமாக நடத்தி வரும் இறைச்சி கடைக்கு, சிறுமியின் தாயார் சென்று உள்ளார்.

பின்னர், அடுத்த சிறிது நேரத்தில் கடையில் இருந்த தாயார் தனது வீட்டுக்கு திரும்பி இருக்கிறார். ஆனால், வீட்டில் மகள் இல்லாததை கண்டு கடும் அதிர்ச்சியடைந்து இருக்கிறார். இதனால், பதறிப்போன சிறுமியின் தாயார், தன் மகளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்து உள்ளார். எங்கும் தேடியும் மகள்  கிடைக்காத நிலையில், அங்குள்ள சதுரங்கப்பட்டினம் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்து உள்ளார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், மாயமான சிறுமியை தேடி வந்தனர்.

அப்போது சிறுமியின் வீட்டின் அருகே உள்ள முள்புதரில் தலையில் காயங்களுடனும், உடல் முழுவதும் காயங்களுடன் சிறுமியிடன் உடல் சடலமாக கிடப்பது தெரிய வந்தது.

இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவுமனைக்கு  அனுப்பி வைத்தனர். 

மேலும், இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்திய போலீசார், சம்பவ நடந்த இடத்தில் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தனர். அந்த இடத்தில் காட்டிய செல்போன் சிக்னலை வைத்து போலீசார் மிகத் தீவிரமாக விசாரணை செய்தனர். இந்த விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது ஐஐடி மாணவன் போலீசாரின் விசாரணை வலையத்திற்குள் வந்தான். 

விசாரணையின் போது, முதலில் “எனக்கும், சிறுமியின் கொலைக்கும் எந்த சம்பந்தமுமில்லை” என்று, அவன் கூறியிருக்கிறான்.

அப்போது, போலீசார் அவனது செல்போன் என்ணை காண்பித்து விசாரித்தனர். அப்போது தான், அந்த 17 வயது சிறுவன் உண்மையை ஒப்புக்கொண்டான்.

அந்த 17 வயது சிறுவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், “ரோட்டில் தனியாக வந்த சிறுமியை பேச்சுக் கொடுத்து புதர் இருக்கும் பக்கமாக அழைத்து வந்து, அங்கு யாரும் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்ததால், அந்த சிறுமியிடம் பாலியல் அத்து மீறிலில் அந்த சிறுவன் ஈபட்டு இருக்கிறான். ஆனால், அதற்கு அந்த சிறுமி சம்மதிக்காமல் முரண்டு பிடித்ததால், அவர் தலையில் கல்லால் அடித்தேன்” என்றும், கூறியிருக்கிறான்.

மேலும், தலையில் பலமாக அடிப்பட்ட சிறுமி, உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நேரத்தில், இது சமயம் என்று நேரம் பார்த்து காந்திருந்தது போல அந்த 17 வயது கொடூர சிறுவன், “சிறுமியின் உடலில் பல இடங்களில் கடித்து கடித்து” வைத்திருக்கிறான். 

அத்துடன, “சிறுமி, உயிர் பிழைத்தால் தன்னை காட்டிக்கொடுத்துவிடுவார் என்று, முழுவதுமாக அந்த 6 ஆம் வகுப்பு சிறுமியை அடித்தே கொலை” செய்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், சிறுவனின் பின்புலம் பற்றி விசாரித்து உள்ளனர்.

அப்போது, “பெற்றோர் இல்லாததால், உறவினர் வீட்டில் வளர்ந்து வந்த சிறுவன், கஞ்சாவுக்கும் ஆபாச படங்களுக்கும் அடிமையாகி போனார் என்றும், இதன் காணமாக, இப்படி ஒரு கொடூரமான செயலை அவர் செய்திருப்பதாகவும்” போலீசாரின்  விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

இதனையடுத்து, அந்த 17 வயது சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார், சிறுவன் செய்த கொடூரங்கள் என்னென்ன என்பதை ஆதாரப்பூர்வமாக வைத்து அவன் மீது மேலும் பல வழக்குகள் பதிவு செய்ய முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான விசாரணை தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.