மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை வைத்து பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி போன்ற வெற்றி படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் சிந்துபாத். இந்தப் படத்தை கே புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யுவன்சங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது. 

Vijay Sethupathis Sindhubaadh Movie Release Stopped Here Is The Clarification

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடிக்கிறார். படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். அதுமட்டுமல்லாமல் விஜய்சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி முக்கிய ரோலில் நடிக்கிறார். படத்தின் ட்ரைலர் வெளியாகி பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது.

Vijay Sethupathis Sindhubaadh Movie Release Stopped Here Is The Clarification Vijay Sethupathis Sindhubaadh Movie Release Stopped Here Is The Clarification

ஜூன் 21-ம் தேதி ரிலீஸாகவிருக்கும் இந்த படத்தை வெளியிட கூடாதென்று ஆர்கா மீடியா ஒர்க்ஸ் நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் வேறெந்த டிஜிட்டல் நடைமேடைகளிலும் வெளியிடக்கூடாதென்றும் கூறியுள்ளனர். அப்படி வெளியிட்டால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளனர். இதனால் சோகத்தில் உள்ளனர் விஜய்சேதுபதி ரசிகர்கள்.