பாத்திமா விஜய் ஆன்டனி தயாரிப்பில் கணேஷா இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸாகும் படம் திமிரு புடிச்சவன். 

நான், சலீம், பிச்சைக்காரன் போன்ற தரமான படங்களை தந்து சினிமா விரும்பிகள் மத்தியில் பெரிதும் பெயர் பெற்றார் விஜய் ஆன்டனி.

தற்போது இவர் நடித்திருக்கும் திமிரு புடிச்சவன் படத்தின் ஸ்னீக் பீக் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது.

இதில் போலீஸ் வேடத்தில் ரோட்டில் குப்பை அள்ளுவது போன்ற காட்சி இணையத்தை ஈர்த்து வருகிறது. படத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ், டேனியல் பாலாஜி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன் போன்ற நடிகர்கள் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

வரும் நவம்பர் 16-ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படம் பெரிதளவில் எதிர்பார்க்கப்படுகிறது.