தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னனாகவும் ரசிகர்களின் உடன் பிறவா அண்ணனாகவும் விளங்குபவர் தளபதி விஜய். தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் பிகில் படத்தின் ரிலீஸுக்கு காத்திருக்கிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. வரும் 19-ம் தேதி இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடக்கவுள்ளது. 

Thalapathy Sixty Four Shooting In October

இதனை தொடர்ந்து மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் தளபதி 64 படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். தற்போது வெளியான செய்தி என்னவென்றால், அக்டோபர் 3-ம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாம்.

Thalapathy Sixty Four Shooting In October

இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் கியரா அத்வானி நடிக்கவுள்ளனர் என்ற செய்தி தெரியவந்தது, ஆனால் இன்னும் நாயகி யாரென்று உறுதியாகவில்லை. சத்யன் சூரியன் ஒளிப்பதிவாளராக பணிபுரியவுள்ளார் ஃபிலோமின் எடிட்டிங் மேற்கொள்ளவிருக்கிறார். செந்தூர பாண்டியன், ரசிகன் போன்ற படங்களை தயாரித்த சேவியர் பிரிட்டோ தயாரிப்பு பார்வை மேற்கொள்கிறார்.

Thalapathy Sixty Four Shooting In October