அட்லீ இயக்கத்தில் வெளியாகவிருக்கும் பிகில் படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் தளபதி 64. டைட்டில் வைக்கப்படாத இப்படத்தை கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைக்கவுள்ளார்.

Thalapathy Sixty Four Shooting In Delhi

இந்நிலையில், இப்படத்தில் விஜய் ஒரு கேங்ஸ்டராக நடிப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதற்காகவே விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார்.

Thalapathy Sixty Four Shooting In Delhi

மேலும், ஸ்ரீமன், சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், சஞ்சீவ், ஸ்ரீநாத் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். கடந்த 3 ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. தற்போது வட சென்னை பகுதியில் படப்பிடிப்பை முடித்த படக்குழுவினர் ஆக்‌ஷன் காட்சிக்காக, டெல்லி செல்ல இருக்கின்றனர் என்ற தகவல் தெரியவந்தது.