காஃபி, புத்தகம், கிட்டார், அழகான குடும்பம், அன்பான வார்த்தைகள், அண்ணா நகர் நண்பர்கள், லாஜிக்கான ஹீரோயிசம், உணர்வுபூர்வ உரையாடல், மைன்ட் வாய்ஸ் வசனங்கள் மற்றும் ஸ்டஃப்ஸ் இவையனைத்தும் ஓர் படத்தில் கொண்டு வர கௌதம் மேனனால் மட்டுமே முடியும் என்பதை தன் ஒவ்வொரு படங்களின் மூலம் நிரூபிக்கிறார். 

Gautham Menons Oru Chance Kudu Song Teaser Gautham Menons Oru Chance Kudu Song Teaser

தற்போது ஒன்றாக என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஒரு ஒரு சான்ஸ் குடு பாடலை இயக்கியுள்ளார். ஷாந்தனு பாக்கியராஜ் மற்றும் மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள இந்த பாடலில் நடிகர் கலையரசன்  இணைந்துள்ளார். கார்த்திக் குரலில் ஒலிக்கும் இந்த பாடலை பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதியுள்ளார். நடன அமைப்பாளர் சதிஷ் கிருஷ்ணனும் இணைந்துள்ளார். ஒரு சான்ஸ் குடு இந்த பாடலின் டீஸர் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.

Gautham Menons Oru Chance Kudu Song Teaser

ஊரடங்கு நேரத்தில் பல குறும்படங்கள் மற்றும் பாடல்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது. அண்மையில் கௌதம் மேனன் இயக்கத்தில் STR மற்றும் த்ரிஷா நடித்து கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.