தமிழ் திரை உலகின் ஆகச்சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் பல கோடி ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாகவும் திகழும் நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் #சூர்யா42 திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்ட படைப்பாக 3D தொழில்நுட்பத்தில் தயாராகும் #சூர்யா42 திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

முன்னதாக சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அக்ஷய் குமார் உடன் இணைந்து கௌரவத் தோற்றத்தில் நடிக்கும் சூர்யா, நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இதனை அடுத்து இயக்குனர் வெற்றிமாறனுடன் கைகோர்க்கும் சூர்யா, ஜல்லிக்கட்டை மையப்படுத்தி தயாராக இருக்கும் வாடிவாசல் திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தனது 2டி என்டர்டைன்மென்ட் சார்பில் தரமான திரைப்படங்களை தயாரித்து வரும் நடிகர் சூர்யாவின் திரைப்பயணத்தில் மிக முக்கிய திரைப்படமாக அமைந்தது ஜெய்பீம் திரைப்படம். இயக்குனர் TJ.ஞானவேல் இயக்கத்தில் மலை கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு நேர்ந்த அநீதிகள் நிறைந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு நடிகர் சூர்யா தயாரித்து நடித்த ஜெய் பீம் திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீஸாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளை பெற்றது.

பல சர்வதேச விருது விழாக்களில் திரையிடப்பட்ட ஜெய் பீம் திரைப்படம் பல்வேறு விருதுகளை வாங்கி குவித்ததோடு ஆஸ்காருக்கான பரிந்துரை பட்டியலின் முதல் நிலை வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜெய் பீம் திரைப்படம் வெளியாகி தற்போது ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ளது. மக்களின் உணர்வை தொட்ட திரைப்படமாக அனைவராலும் ரசிக்கப்பட்ட ஜெய் பீம் திரைப்படம் ஓராண்டு நிறைவு செய்ததை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில் நடிகர் சூர்யா இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜெய் பீம் திரைப்படம் ஓராண்டு நிறைவு செய்வதை கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்… இப்படி ஒரு நல்ல அர்த்தமுள்ள திரைப்படத்தை கொடுத்த சகோதரர் - இயக்குனர் TJ.ஞானவேல் மற்றும் அவரது குழுவினர் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வழக்குரைஞர் சந்துரு கதாபாத்திரம் எனது திரைப்பயணத்தின் மைல் கல்லாக அமைந்துள்ளது” என தெரிவித்துள்ளார். சூர்யாவின் அந்த பதிவு இதோ…
 

Happy to celebrate one year of #JaiBhim From script to execution this film kept getting stronger & stronger.. I thank my brother @tjgnan Gnanavel & Team for giving us this most meaningful film. Lawyer Chandru is a landmark role in my career! https://t.co/iSLn1Tj3ir

— Suriya Sivakumar (@Suriya_offl) November 2, 2022