வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் தொலைக்காட்சி விஜய் டிவி.இவர்களது வித்தியாசமான நிகழ்ச்சிகளுக்கென்றே தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது.இவர்களின் நிகழ்ச்சிகளை பார்த்து பல முன்னணி தொலைக்காட்சிகளும் அதையே மீண்டும் தங்கள் சேனலில் ஒளிபரப்புவார்கள்.

அப்படி விஜய் டிவியின் செம ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர்.சாதாரண மக்களிடம் இருக்கும் பாடும் திறமைகளை கண்டுபிடித்து அவர்களுக்கு பெரிய அங்கீகாரம் வாங்கி தரும் ஒரு நிகழ்ச்சியாக சூப்பர் சிங்கர் உள்ளது.இந்த தொடரில் பங்கேற்ற பலரும் பிரபலன்களாக மாறியுள்ளனர்.பலர் பின்னணி பாடகர்களான உயர்ந்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் விஜய் டிவியில் சமீபத்தில் தொடங்கியது.கோலாகலமாக தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் அனிருத் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.வழக்கம்போல இந்த சீசனும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை [பெற்று வருகிறது.இந்த நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக மானசி பங்கேற்று வருகிறார்.சில வாரங்களிலேயே இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகினார்.தற்போது தனது பெயரில் யாரோ போலி ட்விட்டர் பக்கம் வைத்துள்ளனர் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார் மானசி.

super singer 8 fame maanasi g kannan about fake twitter profile