தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சிவகார்த்திகேயன்.டாக்டர்,அயலான் உள்ளிட்ட படங்களில் தற்போது நடித்துள்ளார்.இந்த படங்கள் விரைவில் வெளியாகவுள்ளன.இந்த படங்களின் ஷூட்டிங்கை சமீபத்தில் நிறைவு செய்தார் சிவகார்த்திகேயன்.இதனை தொடர்ந்து இவர் நடிக்கும் அடுத்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார்.

நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் டாக்டர் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தை சிவகார்த்திகேயனின் SK ப்ரொடுக்ஷன்ஸ் மற்றும் KJR ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.யோகி பாபு,வினய்,டோனி,ஜாரா அர்ச்சனா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தெலுங்கில் கடந்த வருடம் நானி நடித்த கேங் லீடர் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான பிரியங்கா மோகன்.இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படத்தின் மூலம் இவர் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.இந்த படம் மார்ச் 26ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.இந்த படத்தின் மூன்றாவது பாடலான சோ பேபி பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல ட்ரெண்ட்அடித்து வருகிறது.தமிழகத்தில் தேர்தல் தேதி ஏப்ரல் 6 என்று அறிவிக்கப்பட்டுள்ளது இதனை அடுத்து தேர்தல் தேதியை ஒட்டியுள்ள படங்களின் ரிலீஸ் தேதியில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதே போல தேர்தல் காரணமாக டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறது என்று படக்குழுவினர் அறிவித்தனர்.தற்போது இந்த படம் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.படத்தின் ரிலீஸ் தேதி உறுதியானதை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.