கடந்த 2012 ஆம் ஆண்டு இயக்குனார் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான படம் வழக்கு என் 18/9. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் அறிமுகமானவர் நடிகை மனிஷா யாதவ். கல்லூரி காலம் முதலே மாடலாக இருந்து வந்த மனிஷா 2012-ம் ஆண்டு வழக்கு என் 18/9 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக கால்பதித்தார்.

இதன் பின்னர் பல தமிழ் படங்களில் நடித்து வந்த இவர், ஒரே ஒரு தெலுங்கு படத்தில் மட்டும் தலை காட்டினார். வழக்கு என் 18/9 திரைப்படத்திற்கு பின்னர் ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம், திரிஷா இல்லன நயன்தாரா போன்ற உள்ளிட்ட படங்களில் நடித்தார் மனிஷா.

அதன் பிறகு சென்னை 28 பார்ட் 2-வில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருந்தார். சொப்பன சுந்தரி எனும் அந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. அதன் பின்னர் 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடித்து வந்தவர், ஒரு குப்பை கதை மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

பொதுவாக நடிகைகள் சிலர் திருமணத்திற்கு பின்னர் நடிப்பது இல்லை. ஆனால் இவரோ திருமணமான அடுத்த ஆண்டே சினிமாவில் நடித்தார்.

சமூக வளைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் மனிஷா, அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அவ்வளவு ஏன் திருமணத்திற்கு பின்னர் கூட பிகினி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அந்த வகையில், தற்போது பிகினி உடையில் இவர் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.