ராஜா ராணி படத்தில் சிறிய ரோலில் நடித்து அறிமுகமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். அதைத்தொடர்ந்து காலா, விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாம் சீசன் மூலம் உலகளவில் பிரபலமானார் சாக்ஷி. அதன் பிறகு சின்ட்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில்  நடித்துள்ளார். படவாய்ப்புகள் ஒரு பக்கம் வந்துகொண்டிருக்க, சோஷியல் மீடியாவில் இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டு. 

சாக்ஷி பதிவிடும் ஃபிட்னஸ் டிப்ஸால் சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் பலம் கூடியது. தமிழ் மக்களிடையே பிரபலமான முகமாக சாக்ஷி மாறினார். சில படங்களில் பிறருக்கு டப்பிங் கொடுத்துள்ளார் சாக்ஷி. பல விழா மேடைகளில் இவர் நடனமாடியுள்ளார். 

லாக்டவுன் நேரத்தில் திரையுலகை சேர்ந்தவர்கள் கடுமையாக ஒர்க்அவுட் செய்கிறார்கள். ஒர்க்அவுட் செய்வது, வாக்கிங் செல்வது, சைக்கிள் ஓட்டுவது என்று பிசியாக இருக்கிறார்கள். அவர்களை பார்த்து சாதாரண மக்களுக்கும் ஃபிட்டாக இருக்கும் ஆசை ஏற்பட்டு வருகிறது. இப்படியிருக்க அசத்தலான ஒரு பதிவை இன்ஸ்டாகிராமில் செய்துள்ளார் சாக்ஷி. 

அதில் விவேகம் பட பாடலை கேட்டுக்கொண்டே ஒர்க்அவுட் செய்கிறார் சாக்ஷி. லாக்டவுன் காரணமாக ஜிம் மூடப்பட்டுள்ளதால் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்கிறார் சாக்ஷி. இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார் சாக்ஷி. இந்த வீடியோ இணையத்தை தெறிக்கவிடுகிறது. 

ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள டெடி படத்திலும் சாக்ஷி நடித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் டெடி. ஆர்யா ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தை சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியுள்ளார். இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடித்துள்ளார். யுவா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இதனைத்தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் அரண்மனை 3 போன்ற படங்கள் உள்ளது. ஆர்யா மற்றும் ராஷி கண்ணா நடித்துள்ளனர். விவேக் முக்கிய ரோலில் நடித்துள்ளார். லாக்டவுன் காரணமாக இதன் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#feelitreelit #homeworkout #staysafe #stayfit #workout #tricep #motivation #fitfam #instamood #instagood

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal) on