லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். XB பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், தீனா, சேத்தன், கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. 

கொரோனா ஊரடங்கால் மாஸ்டர் ரிலீஸை தள்ளிப்போடும் நிலை உருவானது. மாஸ்டர் திரைப்படம் நிச்சயம் திரையரங்கில் தான் வெளியாகும் என்ற ருசிகர செய்தியை தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ உறுதி செய்தார். ஏப்ரல் 9-ம் தேதி தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக மாஸ்டர் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் அதற்குள் கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் அதிகம் பரவிய காரணத்தினால் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன. அதனால் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தயாரிப்பாளர் தள்ளி வைத்துள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தியேட்டர்கள் மூடப்பட்டு தான் இருக்கின்றன. மீண்டும் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்பது பற்றிய விவரமும் தெளிவாக இல்லை. சமீபத்தில் குவிட் பண்ணுடா பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. 

இன்று ஆர்.ஜே.பாலாஜியின் மூக்குத்தி அம்மன் பட ட்ரைலர் வெளியானது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கி, நடித்துள்ள இந்தப் படத்தில் நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க, மௌலி, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்டோர் முக்கியப் பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். RJ பாலாஜியுடன் இணைந்து NJ சரவணனும் இந்த படத்தை இயக்கியுள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரிஷ் கோபால கிருஷ்ணன் இசையமைத்துள்ளார். செல்வா RK படத்தொகுப்பு மேற்கொள்கிறார். 

இந்த படத்தின் ட்ரைலரை பார்த்த லோகேஷ் கனகராஜ், ஆர்.ஜே. பாலாஜிக்கு தனது வாழ்த்துக்களை பதிவு செய்தார். அப்போது ரசிகர் ஒருவர் தீபாவளிக்கு மாஸ்டர் டீஸர் ரிலீஸ் ஆகுமா என்று கேட்க, பாத்து பண்ணு லோகேஷ் என்று கமெண்ட் செய்தார் ஆர்.ஜே. பாலாஜி. இதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், வெறும் ஸ்மைலியை மட்டும்  பதிவிட்டார். லோகேஷின் இந்த கமெண்ட்டின் கீழ், அப்டேட் ஏதாவது கிடைக்குமா என்ற ஆவலில் உள்ளனர் தளபதி ரசிகர்கள். 

மாஸ்டர் படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் 232 படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ். இதன் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.