திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் பிரவீனா.தமிழ்,தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பல விருதுகளையும் வென்றுள்ளார் பிரவீனா.

டப்பிங் கலைஞராகவும் பல சூப்பர்ஹிட் படங்களில் பணியாற்றியுள்ளார் பிரவீனா.சாமி 2,கோமாளி,பீஷ்மா,டெடி உள்ளிட்ட சமீபத்திய படங்களிலும் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார் பிரவீனா.படங்கள் மட்டுமின்றி சீரியல்களிலும் நடித்து பல குடும்பங்களில் ஒரு அங்கமாக மாறினார் பிரவீனா.

மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் முன்னணி சேனல்களின் சீரியல்களில் நடித்து அசத்தி வந்தார் பிரவீனா.இவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பான பிரியமானவள் தொடர் பெரிய வரவேற்பை பெற்று தனது.இந்த தொடரின் மூலம் பட்டிதொட்டி எங்கும் செம ஹிட் அடித்தார் பிரவீனா.

விஜய் டிவியில் சித்து,அலியா மானசா முன்னணி வேடங்களில் நடித்து ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தி வருகிறார் பிரவீனா.தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் பெயரில் சிலர் போலி பக்கங்கள் நடத்தி தவறாக சில காரியங்களை செய்து வருகின்றனர்,அவர்கள் குறித்து சில நடவடிக்கைகள் எடுத்தும் அவர்கள் நிறுத்தத்தால் தற்போது சைபர் கிரைம்மில் புகார் அளித்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.