தமிழ் சினிமாவின் சிறந்த நடிகைகளில் ஒருவர் த்ரிஷா. 96, பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து கர்ஜனை, பரமபதம் விளையாட்டு, சதுரங்க வேட்டை 2 போன்ற படங்கள் கைவசம் வைத்துள்ளார். எங்கேயும் எப்போதும் புகழ் இயக்குனர் சரவணன் இயக்கும் ராங்கி படத்தில் நடித்துவருகிறார். லைக்கா தயாரிக்கும் இந்த படத்திற்கு சத்யா இசையமைக்கிறார்.

Raangi Shooting Spot Video Leaked

படக்குழுவினர் உஸ்பகிஸ்தானில் படத்தின் முக்கிய காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் செய்தி தெரியவந்தது. இதற்காக வரும் அக்டோபர் 7-ம் தேதி படக்குழுவினர் உஸ்பகிஸ்தான் சென்றனர். படப்பிடிப்பை முடித்து விட்டு அக்டோபர் 27-ம் தேதி சென்னைக்கு திரும்புகின்றனர்.

Raangi Shooting Spot Video Leaked

Raangi Shooting Spot Video Leaked

படத்தில் த்ரிஷா மீடியா நிறுவனத்தின் CEO வாக நடிக்கவுள்ளாராம் என்ற தகவல் தெரியவந்தது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீடியோ வெளியானது. இதுவே இறுதி கட்ட படப்பிடிப்பு என்பதும் தெரியவந்தது.